உத்தரப் பிரதேச மாநிலம் பதூன் பகுதியில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த 25 வயது இளம் தாய், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பதூனைச் சேர்ந்த ரம்பு என்பவரின் மனைவியான ஏக்தா (25) என்பவருக்கு 7 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் மூன்று பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என மொத்தம் நான்கு குழந்தைகள் பிறந்தது. இதில் ஒரு பெண் குழந்தை ஏற்கனவே இறந்து பிறந்துள்ளது. மற்ற இரண்டு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் மாவட்ட அரசு மருத்துவமனையின் தீவிர பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்களின் கண்காணிப்பில் சிகிச்சைப் பெற்று வருகின்றன.
இதற்கிடையே, பிரசவம் முடிந்த சில மணி நேரங்களிலேயே ஏக்தாவிற்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. உடனே அவரை பரேலியில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி ஏக்தா பரிதாபமாக உயிரிழந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆன ஏக்தா, ஏற்கனவே ஒருமுறை கருக்கலைப்புச் சிக்கலைச் சந்தித்துள்ள நிலையில், தற்போது நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்துவிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களையும், இணையவாதிகளையும் கண் கலங்க வைத்துள்ளது.
எம்.ஜி.ஆர் தயாரித்து, இயக்கி, நடித்து 1973-ல் வெளியான புகழ்பெற்ற திரைப்படம் 'உலகம் சுற்றும் வாலிபன்'. பல வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட இப்படம்…
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்தால் விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் எனத் தேர்தலின் போது அக்கட்சியின் தலைவர் விஜய்…
கேரளாவில் கணவர் காரை பின்னோக்கி இயக்கியபோது எதிர்பாராதவிதமாகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிய விபத்தில் மனைவி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில்…
தமிழக அரசியல் களத்தில் மாற்று சக்தியாகத் தன்னை முன்வைத்து களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு, ஒரே…
மகாராஷ்டிரா மாநிலம் சந்திரபூர் மாவட்டத்தில் சைக்கிளில் சென்ற சிறுவன் மீது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதிய விபட்டின் சிசிடிவி…
திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இல்லத் திருமணத்தில் வேத மந்திரங்கள் முழங்க, இந்து முறைப்படி சடங்குகள் நடைபெற்றதற்கு பாஜக மூத்த தலைவர்…