“10 To 5 ஆபீஸ் வேலை இல்லை முதல்வர் பதவி”…. தவெக ஆட்சிக்கு ரெட் அலர்ட்…. விஜய் அரசை சுக்குநூறாக கிழித்து தொங்கவிட்ட மு.க.ஸ்டாலின்….!

Spread the love

கோவை நகரில் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் பெரியார் அறிவுலகம் அமைப்பதற்கான பணிகள் திட்டமிடப்பட்டு, அதன் கட்டுமானங்கள் முழுமையாக நிறைவடைந்தன. இந்நிலையில், தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அண்மையில் முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய் கடந்த மாதம் இந்த பெரியார் அறிவுலகத்தைத் திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து, பெரியார் அறிவுலகத்தை உருவாக்கியதற்காக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அவரைப் பாராட்டும் வகையிலும் திராவிடர் கழகம் சார்பில் சிறப்பு விழா ஒன்று கோலாகலமாக நடத்தப்பட்டது.

பாராட்டுகளுக்கு இடையே இந்த விழாவில் உரையாற்றிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் மிகக் கடுமையாகச் சாடிப் பேசினார். தங்களை “100 சதவீதம் தூய சக்தி” என்று கூறிக்கொள்பவர்களின் ஆட்சி, நாளுக்கு நாள் துர்நாற்றம் வீசும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டினார். மேலும், முதலமைச்சர் பதவி என்பது காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வந்து செல்லும் அலுவலகப் பணி அல்ல என்றும், மக்கள் பணிக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணிக்க வேண்டிய பொறுப்பு அது என்றும் சுட்டிக்காட்டிய அவர், இவ்வளவு பலவீனமான ஒரு முதலமைச்சரைத் தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை என்றும் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய மு.க.ஸ்டாலின், முதல்வர் விஜய் பத்திரிகையாளர்களைக் கண்டாலே பயந்து ஓடுவதாகச் சாடினார். ஆட்சியின் தவறுகளுக்கு எவ்விதப் பொறுப்பும் ஏற்காமல், எது கேட்டாலும் திமுக மீதே பழியைப் போடும் போக்கு நிலவுவதாகக் குறிப்பிட்டார். சினிமாவில் மற்ற நடிகர்கள் குறித்து அவதூறு பரப்பி வெற்றி கண்டதைப் போல, அரசியலிலும் பொய்களையும் போலி வீடியோக்களையும் பரப்பி ஒருமுறை ஆட்சியைப் பிடித்துவிட்டதாகக் கூறினார். இன்று மக்கள் மாதந்தோறும் ₹5,000 முதல் ₹10,000 வரை கூடுதலாகச் செலவழிக்க வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலைகளும் குற்றங்களும் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

ஆட்சிப் பொறுப்பேற்ற ஒரே மாதத்திலேயே மாநிலம் முழுவதும் மின்வெட்டுப் பிரச்சனை தலைதூக்கியுள்ளதாகவும், சுடுகாடுகளில் உடல்களைக் கூட எரிக்க முடியாத அவலநிலை நீடிப்பதாகவும் ஸ்டாலின் சாடினார். குறைந்த விலைக்கு மின்சாரம் வாங்குவதைக் கிடப்பில் போட்டுவிட்டு, கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், 5 ஆண்டுகளில் வர வேண்டிய அவப்பெயரை 5 மாதங்களிலேயே தவெக அரசு பெற்றுவிட்டதாகத் தெரிவித்தார். தவெகவின் இந்த ஆரோக்கியமற்ற அரசியலுக்கு மக்கள் விரைவில் முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்றும், இந்த ஆட்சிக்கு மக்கள் ஏற்கெனவே “ரெட் அலர்ட்” கொடுத்துவிட்டனர் என்றும் தனது உரையில் மு.க.ஸ்டாலின் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

25 minutes ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

29 minutes ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

56 minutes ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

59 minutes ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

1 மணத்தியாலம் ago