வீட்டின் பின்புறம் அழுகுரல்… என்ன நடந்தது?… தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மீட்பு… CCTV-யில் சிக்கிய மர்மம்?… நடுநடுங்க வைத்த சம்பவம்…!!

Spread the love

சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் பகுதியில் உள்ள முதலமைச்சர் விஜய் வீட்டின் பின்புறம், சுமார் 300 மீட்டர் தொலைவில் நடைபயிற்சி மேற்கொண்ட பொதுமக்கள் அழுகுரல் கேட்டுச் சென்று பார்த்தபோது, தொப்புள் கொடி கூட அகற்றப்படாத நிலையில் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று கேட்பாரற்றுக் கிடந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து தகவலறிந்து விரைந்து வந்த நீலாங்கரை காவல்துறையினர் அக்குழந்தையை மீட்டு, உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவினரிடமும், அரசு குழந்தைகள் நலக்குழுவிடமும் விவரம் தெரிவிக்கப்பட்டு, உயர் சிகிச்சைக்காக குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

பச்சிளம் குழந்தையை சாலையோரத்தில் வீசிச் சென்றவர்கள் யார், என்ன காரணத்திற்காக அங்கு விட்டுச் சென்றார்கள் என்பது தொடர்பாக நீலாங்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை அடையாளம் காணும் பொருட்டு, அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.

Gayathri

Recent Posts

“30 அடி ஆழத்தில் எலும்புக் கூடு”…. மனைவியை கொன்று நெடுஞ்சாலை மணலில் புதைத்த கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்…. திடுக்கிடும் சம்பவம்….!

திண்டுக்கல் அருகே உள்ள இரண்டெல்லைப்பாறையைச் சேர்ந்த கூலித் தொழிலாளி லாரன்ஸ் (36), தனது மனைவி கவுசல்யாவை (32) குடும்பத் தகராறு…

3 minutes ago

ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை…! சவரன் ரூ.1,07,000-ஐ தாண்டி புதிய உச்சம்… அதிர்ச்சியில் நகை பிரியர்கள்…!!

சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவிற்கு அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வாரத்தின் தொடக்கத்தில்…

9 minutes ago

“அதிபர் டிரம்ப் இறந்துவிட்டாரா?”…. ஈரான் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோவால் உலக அரங்கில் வெடித்தப் புயல்… சர்வதேச அரசியலில் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறந்துவிட்டதாகவும், அவரது முகத்தில் ஈ மொய்ப்பது போன்றும் ஈரான் அரசு ஊடகங்களின் அதிகாரப்பூர்வ பக்கங்களில்…

10 minutes ago

திடீர் திருப்பம்…. கவிதா ஜவஹருக்கு பதவி.. திமுக டூ அரசு பொறுப்பு…. அரசியலில் அதிரடி டுவிஸ்ட்….!

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவராகப் பிரபல பட்டிமன்றப் பேச்சாளரும், கவிஞருமான கவிதா ஜவஹர் அவர்கள் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.…

15 minutes ago

நஸ்ரியா vs சூர்யா…! உண்மை இதோ… சூர்யாவுக்கு பல்பு கொடுத்த நஸ்ரியா?!… 3 படங்களை நிராகரித்தது உண்மையா?… வெடித்த சர்ச்சை…!!

இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா மற்றும் நஸ்ரியா இணைந்து நடித்துள்ள 'சீன்' திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு விளம்பர நிகழ்வுகள்…

23 minutes ago

அடுத்த ஹீரோ!… கோலிவுட்டில் புதிய என்ட்ரி… மருமகள் கோரிக்கை… நெப்போலியன் மகனுக்கு அடித்த அதிர்ஷ்டம்… ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்தது என்ன?…

நடிகரும் முன்னாள் மத்திய அமைச்சருமான நெப்போலியன், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மூத்த மகன் தனுஷின் சிகிச்சை மற்றும் எதிர்காலத்திற்காகக்…

29 minutes ago