“ரூ. 100 பட்ஜெட்… வெறும் மேகி நூடுல்ஸ்.. சிறுவர்களின் எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம் – இணையவாசிகளை உருகவைத்த நெகிழ்ச்சி வீடியோ.!

Spread the love

ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் என்ற சிறுவனின் எளிமையான பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ, தற்போது இணையத்தில் பலரது இதயங்களை வென்று வைரலாகி வருகிறது. ஆடம்பரமான கேக், அலங்காரங்கள் எதுவுமில்லாமல், வெறும் 100 ரூபாய் மதிப்பிலான மேகி நூடுல்ஸ் மற்றும் ஒரு ஃபான்டா குளிர்பான பாட்டிலுடன் அந்தச் சிறுவன் தன் நண்பர்களுக்குப் பிறந்தநாள் விருந்து அளித்துள்ளான். “ஹலோ பிரண்ட்ஸ், இன்னைக்கு சூரஜோட பிறந்தநாள், அவன் 100 ரூபாய்க்கு மேகி வாங்கிட்டு வந்திருக்கான், ஃபான்டாவும் இருக்கு, எங்களுக்கு பார்ட்டி தர்றான்” என்று அவனது நண்பன் ஒருவன் மழலை மாறாத குரலில் உற்சாகமாக அறிமுகப்படுத்துவதுடன் இந்த வீடியோ தொடங்குகிறது.

அந்தக் காணொளியில், ஒரு சிறிய அடுப்பில் சூரஜ் புன்னகையுடன் மேகி சமைப்பதையும், அவனது நண்பர்கள் அனைவரும் சுற்றிலும் அமர்ந்து அந்த எளிய உணவிற்காக ஆவலோடு காத்திருப்பதையும் காண முடிகிறது. சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட இந்த வீடியோ, வெளியான சில நாட்களிலேயே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்று இணையவாசிகளை நெகிழச் செய்துள்ளது. ஆடம்பரமான கொண்டாட்டங்களை விட, உண்மையான மகிழ்ச்சியும் பாசமும் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில்தான் இருக்கிறது என்பதை இந்தச் சிறுவர்களின் எதார்த்தமான அன்பு உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/DYPdEcRB2yF/?utm_source=ig_web_copy_link

இணையத்தில் வைரலான இந்த நெகிழ்ச்சியான பதிவைக் கண்ட ஆயிரக்கணக்கான பயனர்கள், சிறுவன் சூரஜிற்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, அவனது இந்தத் தூய்மையான அன்பால் ஈர்க்கப்பட்ட பல நெட்டிசன்கள், அவனுக்குப் பிறந்தநாள் பரிசு வழங்க விரும்பி, அவனது யுபிஐ (UPI) எண்ணைக் கமெண்ட் பகுதியில் கேட்டு அலாதியான அன்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். இன்று காட்டப்படும் போலி சமூக ஊடக வாழ்க்கைக்கு மத்தியில், இவர்களின் இந்த எளிய கொண்டாட்டம் பலருக்கும் தங்களின் சிறுவயது நினைவுகளையும், உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தையும் நினைவூட்டியுள்ளது.

Swetha

Recent Posts

“ஒரே ஒரு வார்த்தை… ஓங்கி அறைந்த போலீஸ்”…. பதிலுக்கு திருப்பி அடித்த வாலிபர்…. தஞ்சையில் உச்சகட்ட பரபரப்பு…. ஷாக்கிங் வீடியோ…!

தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்‌டிருந்த விசிக பேனரை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியதாகக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கட்சியினர்…

4 minutes ago

“என்னை விட்டுரு… மஞ்சள் நிற டி-ஷர்ட் அணிந்த மர்ம நபர்…” தூய்மை பணியாளரை கொடூரமாக தாக்கிய கொலையாளி… சரிந்து விழுந்த வாலிபர்…. வைரலாகும் பரபரப்பு வீடியோ…!!

கிழக்கு டெல்லியின் கல்யாண்புரி பகுதியில் டெல்லி மாநகராட்சியில் (MCD) தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்த அனில் (27) என்ற வாலிபர்…

10 minutes ago

தண்ணீரிலேயே வாழ்ந்த சிறுவனுக்கு என்ன ஆச்சு?… திடீரென அழைத்துச் சென்ற ஜியோ… உண்மையை உடைக்கச் சொல்லும் மருத்துவர்… திடுக்கிடும் பின்னணி…!!

மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால், தண்ணீரை விட்டு வெளியே வந்தால் உடலில்…

13 minutes ago

ஐயோ பாவம்…! ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த 75 வயது முதியவர்… கீழே தள்ளி கடித்து குதறிய தெரு நாய்… வைரலாகும் திக் திக் வீடியோ காட்சிகள்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மகாந்தேஷ் நகர் பிரதான சாலையில், லவ் டேல் பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்த…

19 minutes ago

“அதே கேள்வியை மத்தவங்ககிட்ட கேப்பீங்களா?”… சர்ச்சைக்கு கூலாக பதிலடி கொடுத்த நடிகை மாளவிகா சர்மா… கேரள நிருபரை கிழித்துத் தொங்கவிட்ட இணையவாசிகள்…!!

மகாராஷ்டிராவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை மாளவிகா சர்மா, தான் அறிமுகமாகும் 'கலிஃபா' என்ற மலையாளப் படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளுக்காகச் சமீபத்தில்…

25 minutes ago