செப்டம்பர் 11 தீவிரவாதத் தாக்குதலின் 25ஆம் ஆண்டு நினைவையொட்டி, ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நடைபெற்ற கூட்டத்தில் அமெரிக்கா தனது உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை சுட்டிக்காட்டியது. இக்கூட்டத்தில் பேசிய ஐநாவுக்கான அமெரிக்கத் தூதர் மைக் வால்ட்ஸ், “நாம் அனைவரும் இணைந்து ஒசாமா பின் லேடனை வேட்டையாடினோம்; ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் கலீஃபாவை அழித்ததோடு அல்-பக்டாதி மற்றும் அல்-ஜவாஹிரியையும் ஒழித்தோம்” என்று உலக நாடுகளின் கூட்டு முயற்சிகளை நினைவு கூர்ந்தார்.
பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற லாட்வியா முதல் லைபீரியா வரையிலான அனைத்து நாடுகளுமே தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடி தங்களது பாதுகாப்புப் படையினரை இழந்துள்ளன என்று மைக் வால்ட்ஸ் சுட்டிக்காட்டினார். பாகிஸ்தானின் பெஷாவர் பள்ளி தாக்குதல் மற்றும் லண்டன் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்களைக் குறிப்பிட்டு, 9/11 மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பயங்கரவாதத்தின் வடுக்களைச் சுமந்து வருகின்றன என்பதை வலியுறுத்தினார்.
இக்கூட்டத்தில், பயங்கரவாதத்திற்கு எதிரான தனது தெளிவான கண்டனத்தை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தும் வகையிலான தலைவர் அறிக்கையை பாதுகாப்பு கவுன்சில் ஏகமனதாக ஏற்றுக்கொண்டது. கடந்த 5 ஆண்டுகளில் பயங்கரவாதத்திற்கு எதிராக பாதுகாப்பு கவுன்சில் வெளியிடும் முதல் தலைவர் அறிக்கை இதுவாகும். 9/11 தாக்குதல் நடந்து 25 ஆண்டுகள் கடந்த பின்னரும், பயங்கரவாதத்தை எதிர்கொள்ள அனைத்து நாடுகளின் கூட்டு நடவடிக்கை இன்றும் அத்தியாவசியமாக உள்ளது என்பதை இக்கூட்டம் வலியுறுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் மஞ்சேரியால் மாவட்டம் கொத்தபள்ளி பகுதியில், வரதட்சணைக் கொடுமை காரணமாகக் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவியின் மூக்கைக்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் உள்ள ஏக் மூர்த்தி சௌக் அருகே, அதிகாலை நேரத்தில் சாலையைக் கடக்க…
பீகார் மாநிலம் பாட்னா ஜங்ஷன் ரயில் நிலைய வளாகத்திற்கு வெளியே, நள்ளிரவு என்றும் பகல் என்றும் பாராமல் காலில் செருப்புக்…
குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த 28 வயதான ஜான்வி தபி என்ற இளம் பெண் காவலர், காந்திநகர் செக்டார் 3D…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள பிரபல பார்மா தொழிலதிபரும் கோடீஸ்வரருமான வினீத் மனோச்சா கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி…
செங்குத்தான ஏற்றம் அல்லது மேடான சாலைகளில் வாகனங்களை இயக்கும்போது கொஞ்சம் கவனக்குறைவாக இருந்தாலும் எவ்வளவு பெரிய ஆபத்து நேரிடும் என்பதை…