வகுப்பறையில் வளைகாப்பு… அதிர்ந்த பெற்றோர்கள்… அரசுப் பள்ளியில் நடந்த சம்பவம்…

Spread the love

தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களை ஆக்கிரமித்து இருப்பது instagram ஃபேஸ்புக், ட்விட்டர், ஆகியவைகள் தான். யாரைப் பார்த்தாலும் கையில் போனுடன் தான் இருக்கிறார்கள். நல்லது எது கெட்டது எது என்பதை பிரித்து பார்க்கும் தன்மை இளைஞர்கள் இடம் இல்லை. அதற்கும் ஒரு படி மேலாக போய் அவர்களை ஆட்டுவித்து வைப்பது ரீல்ஸ் மோகம்.

ஆபத்தான இடங்களில் ரில்ஸ் எடுப்பதற்காக லைக்ஸுக்காகவும் வியூசுக்காகவும் சென்று உயிரை விட்ட இளைஞர்களின் செய்திகளை நாம் பார்த்திருப்போம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அனைவரும் அதிர்ச்சி அடையும் விதமாக அரசு பள்ளியில் ரீலிஸ் மோகத்தினால் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.

வேலூர் மாவட்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெளியிட்ட ரீலிஸ் வீடியோ ஆசிரியர் மற்றும் பெற்றோர்களிடையே பதபதாப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் சிலர் பள்ளியின் மேல் தளத்திற்கு சென்று பள்ளி சீருடைகளிலேயே வளைகாப்பு விழா நடத்துவது போல வீடியோ ரிலீஸ் எடுத்து இருக்கின்றனர்.

மாணவிகள் அனைவரும் பள்ளி சீருடைகள் இருக்க ஒரே ஒரு பெண் பள்ளி சீருடைக்கு மேலே சேலை உடுத்தினார் போல் வெள்ளை துணி கட்டிக்கொண்டு அந்த பெண்ணிற்கு வளைகாப்பு நடத்துவது போல் தாம்பலம், பூ, வளையல், பன்னீர் சந்தனம் என அனைத்தையும் முன்னே வைத்து ரிலீஸ் வீடியோ எடுத்துள்ளனர். இது மட்டுமல்லாமல் டிஜிட்டல் பத்திரிகை ஒன்றும் டித்திருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் போட்டோ சூட் எடுப்பது போன்றவும் வீடியோ எடுத்திருக்கின்றனர்.

இந்த மாணவிகளின் எடுத்த வளைகாப்பு வீடியோவானது இன்ஸ்டாவில் வைரலாக பரவிய நிலையில் வேலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி அந்த வகுப்பு ஆசிரியை ஆன முனீஸ்வரியை பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் பள்ளி வேலை நாளில் பள்ளி சீருடைகள் இந்த மாதிரி மாணவிகள் செய்த விவகாரத்திற்கு விளக்கம் அளிக்குமாறு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமாவிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மொபைல் போன் எடுத்து வரக்கூடாது என்று கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் இது போன்ற மாணவிகள் ரீலிஸ் மோகத்தினால் இவர்கள் செய்யும் வேலையை கண்டு ஆசிரியர்களும் பெற்றோர்களும் வேதனை அடைந்துள்ளனர். மேலும் இந்த சமுதாயம் எங்கு செல்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து பதிவித்து வருகின்றனர்.

admin

Recent Posts

பகீர்..! விளையாட்டில் ஏற்பட்ட மோதல்.. 12 வயது சிறுவனின் கண்களை குத்திக் கிழித்த கொடூரம்.. பக்கத்து வீட்டாரின் கொடூரச்செயல்..!!

பீகாரில் நடந்த இந்த கொடூரமான சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாக அமைந்துள்ளது. வெறும் 12 வயதே ஆன சன்னி என்ற…

28 minutes ago

“சந்து பொந்தெல்லாம் சேஸிங்”… கடைசியில் நேர்ந்த விபரீதம்… லூதியானாவில் நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…!

லூதியானாவில் சினிமா பாணியில் நடந்த கார் திருட்டுச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சமீபகாலமாக கார்…

1 மணத்தியாலம் ago

Breaking: கடைசி நேர அரசியல் டுவிஸ்ட்… திமுக வேட்பாளரின் உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகச் சிக்கிய கோடிகள்… ஸ்டாலினுக்கு செம ஷாக்…!

மயிலாப்பூர் திமுக வேட்பாளர் த.வேலுவின் நேர்முக உதவியாளர் வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை…

1 மணத்தியாலம் ago

“எனக்கு கன்னிப்பெண் தான் வேணும்”… ஐஐடி மாப்பிள்ளையின் விசித்திர நிபந்தனை… மேட்ரிமோனி மேனேஜரின் அதிரடிப் பதிவு…!

கல்வித் தகுதியும், கைநிறையச் சம்பளமும் ஒரு மனிதனின் சமூக அந்தஸ்தை உயர்த்திவிடலாம், ஆனால் அவை அந்த மனிதனின் சிந்தனைப் போக்கை…

2 மணத்தியாலங்கள் ago

“அம்மா வலிக்குது…” சிறுவனின் கதறலை அலட்சியம் செய்த பெற்றோர்….! தலையணை அடியில் காத்திருந்த எமன்…!!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே நள்ளிரவில் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த 8 வயது சிறுவன் ஆல்ஜோ, பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago