தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்துக் கொண்டிருக்கும் ஜெயம் ரவி சமீபத்தில் தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து பிரிவதாக அறிவித்திருந்தார். இந்த விவகாரம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில் இவருடைய விவாகரத்துக்கு முக்கிய காரணம் பிரபல பாடகி ஒருவர் எனவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. ஆனால் நேற்று ஜெயம் ரவியின் பிரதர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பாடகியுடன் தொடர்புபடுத்தி பேசாதீங்க எங்களுக்குள்ள ஒரு உன்னதமான நட்பு இருக்கு என ஜெயம் ரவி கூறி இருந்தார். இந்த நிலையில் நடிகை குஷ்பு, முதலில் ஆர்த்திக்கு ஜெயம் ரவி மீது காதல் இருப்பதை தெரிந்து கொண்டு அந்த காதல் கை கூடுவதற்கு உறுதுணையாக இருந்தார்.
இருதரப்பு வீட்டிலும் பேசி ஜெயம் ரவி மற்றும் ஆர்த்திக்கு திருமணம் செய்து வைத்ததே குஷ்புதான். இவ்வாறு இருக்கையில் ஜெயம் ரவி விவாகரத்து பிரச்சனையில் ஏன் இன்னும் அவர் வாய் திறக்காமல் இருக்கிறார் என பல கேள்விகள் வந்தது. இப்படி இருக்கையில் குஷ்பூ ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். அதில், ஒரு உண்மையான மனிதன் எப்போதும் உயரமாக நிற்பான், தனது குடும்பத்தை மற்றவைகளுக்காக மேலாக மதிப்பான், அவருடைய தேவைகள், ஆசைகள் மற்றும் சுதந்திரங்கள் அனைத்தும் அவரை நிபந்தனையற்ற அன்பில் பத்திரமாக கொண்டவர்களின் பின் வருகின்றன. வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொரு திருமணமும் ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்திக்கும். தவறுகளும் நடைபெறும்.
ஆனால் இந்த தவறுகள் ஒருபோதும் ஒருவருக்கு அவர் கொண்டு வந்த உறவுகளையோ அல்லது நிலைபாடுகளையோ விட்டு விலகுவதற்கான உரிமையை வழங்க. ஒரு உறவில் சில நேரங்களில் அன்பு மங்கி போனாலும் மதிப்பு என்றுமே உறுதியாக இருக்கும். ஒரு உண்மையான மனிதன் தன்னுடைய குழந்தைகளை பெற்றெடுத்தவளை மதிப்பான். சுயநலமான ஒருவர் தனது செயல்கள் வளர்ந்து வரும் குழந்தைகள் மீது எவ்வாறு தாக்கம் ஏற்படுகிறது என்பதை காண தவறுகிறார். வாழ்க்கை அழகிய ஒரு சுழற்சி. சுயநலத்திலிருந்து தோன்றும் செயல்கள் ஒரு நாள் மறுபடியும் அந்த நபரையே தாக்கும் என்று குஷ்பூ பதிவிட்டுள்ள நிலையில் இந்த பதிவு ஜெயம் ரவியை மறைமுகமாக தாக்குவதாக பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில், தான் உயிரோடு இருப்பதை நிரூபிக்க முதியவர் ஒருவர் பிணம் போல நடித்து நூதனப்…
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…