“செல்போனை பிடுங்கி சித்திரவதை…” 2 பிள்ளைகளை தவிக்க விட்டு தாய் எடுத்த விபரீத முடிவு… கதறும் குடும்பத்தினர்…!!

Spread the love

பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும் குடும்பத் தகராறு காரணமாகத் தனது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2021-ஆம் ஆண்டு சந்தோஷ் என்பவருடன் திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஸ்ரீநிதியின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் கூடுதல் வரதட்சணை கேட்டு அவரைத் தொடர்ந்து மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்திரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தனது பெற்றோருடன் பேச முடியாதபடி ஸ்ரீநிதியின் செல்போனையும் அவரது கணவர் பறித்து வைத்துள்ளார்.

தொடர் சித்திரவதையால் மனமுடைந்த ஸ்ரீநிதி, கடந்த சனிக்கிழமை தனது வீட்டின் ஜன்னல் கம்பியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீநிதியின் கணவர், மாமியார் உள்ளிட்ட நான்கு உறவினர்கள் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது ஸ்ரீநிதியின் கணவர் சந்தோஷை கைது செய்துள்ள ஏபிஎம்சி (APMC) போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய ஒரு குடும்பம் வரதட்சணை ஆசையால் சிதைந்து போனது அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

Devi Ramu

Recent Posts

“கண்டபடி திட்டினேன்… ஆனா விஜய் என்கிட்ட என்ன கேட்டாரு தெரியுமா?”….. கருணாஸ் ஓபன் டாக்….. ஆடிப்போன அரசியல் களம்….!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி தீவிர அரசியலில் களமிறங்கிய நடிகர் விஜய்யை, ஆரம்பக் கட்டத்தில் கடுமையாக…

7 minutes ago

“ஆற்றில் பஸ் விழும் அபாயம்… கடைசி வினாடி…” பயணிகளின் உயிரை காப்பாற்றிவிட்டு மாரடைப்பால் சுருண்டு விழுந்த ஓட்டுநர்… கண்ணீர் மல்க பேசிய பயணிகள்…. அதிர்ச்சி சம்பவம்…!!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் இருந்து 25-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் குடியாத்தம் வழியாக சேலம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது.…

14 minutes ago

“திமுகவின் ரகசியத்தை உடைத்த அன்புமணி…. 10.5% இடஒதுக்கீட்டை தடுத்த அந்த 3 ‘மும்மூர்த்திகள்’ யார்?”…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

தமிழகத்தில் சாதிவாரி சமூக-பொருளாதார கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை பல பத்தாண்டுகளாக மாநில அரசியலில் முக்கிய விவாதப் பொருளாக…

15 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் தேர்தல்…. சற்றுமுன் தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…..!

தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் ஆயத்த பணிகளைத் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் முறைப்படி தொடங்கியுள்ளது.…

21 minutes ago

“மது அருந்த சென்ற நண்பர்கள்…” முகத்தை சிதைத்து கொடூரமாக கொன்ற கும்பல்…. சிவகங்கையில் அதிரவைக்கும் இரட்டை கொலை… பெரும் பரபரப்பு…!!

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள குருந்தனி வாரியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தெய்வேந்திரன், பொள்ளாச்சி அருகே டாஸ்மாக் பார் லீசுக்கு…

21 minutes ago

வெளிநாட்டு பயணத்தை முடித்து வந்த கையோடு போட்ட அவசர ஸ்கெட்ச்…. இடைத்தேர்தல் CM விஜய் வைத்த அதிரடி டுவிஸ்ட்….!

தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில…

25 minutes ago