தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்களை ஆக்கிரமித்து இருப்பது instagram ஃபேஸ்புக், ட்விட்டர், ஆகியவைகள் தான். யாரைப் பார்த்தாலும் கையில் போனுடன் தான் இருக்கிறார்கள். நல்லது எது கெட்டது எது என்பதை பிரித்து பார்க்கும் தன்மை இளைஞர்கள் இடம் இல்லை. அதற்கும் ஒரு படி மேலாக போய் அவர்களை ஆட்டுவித்து வைப்பது ரீல்ஸ் மோகம்.

ஆபத்தான இடங்களில் ரில்ஸ் எடுப்பதற்காக லைக்ஸுக்காகவும் வியூசுக்காகவும் சென்று உயிரை விட்ட இளைஞர்களின் செய்திகளை நாம் பார்த்திருப்போம். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அனைவரும் அதிர்ச்சி அடையும் விதமாக அரசு பள்ளியில் ரீலிஸ் மோகத்தினால் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
வேலூர் மாவட்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் வெளியிட்ட ரீலிஸ் வீடியோ ஆசிரியர் மற்றும் பெற்றோர்களிடையே பதபதாப்பை ஏற்படுத்தியுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவிகள் சிலர் பள்ளியின் மேல் தளத்திற்கு சென்று பள்ளி சீருடைகளிலேயே வளைகாப்பு விழா நடத்துவது போல வீடியோ ரிலீஸ் எடுத்து இருக்கின்றனர்.
மாணவிகள் அனைவரும் பள்ளி சீருடைகள் இருக்க ஒரே ஒரு பெண் பள்ளி சீருடைக்கு மேலே சேலை உடுத்தினார் போல் வெள்ளை துணி கட்டிக்கொண்டு அந்த பெண்ணிற்கு வளைகாப்பு நடத்துவது போல் தாம்பலம், பூ, வளையல், பன்னீர் சந்தனம் என அனைத்தையும் முன்னே வைத்து ரிலீஸ் வீடியோ எடுத்துள்ளனர். இது மட்டுமல்லாமல் டிஜிட்டல் பத்திரிகை ஒன்றும் அடித்திருக்கின்றனர். இது மட்டுமல்லாமல் போட்டோ சூட் எடுப்பது போன்றவும் வீடியோ எடுத்திருக்கின்றனர்.

இந்த மாணவிகளின் எடுத்த வளைகாப்பு வீடியோவானது இன்ஸ்டாவில் வைரலாக பரவிய நிலையில் வேலூர் மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி அந்த வகுப்பு ஆசிரியை ஆன முனீஸ்வரியை பணியிடை நீக்கம் செய்துள்ளார். மேலும் பள்ளி வேலை நாளில் பள்ளி சீருடைகள் இந்த மாதிரி மாணவிகள் செய்த விவகாரத்திற்கு விளக்கம் அளிக்குமாறு பள்ளியின் தலைமை ஆசிரியர் பிரேமாவிற்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மொபைல் போன் எடுத்து வரக்கூடாது என்று கல்வித்துறை ஏற்கனவே உத்தரவிட்டிருந்த நிலையில் இது போன்ற மாணவிகள் ரீலிஸ் மோகத்தினால் இவர்கள் செய்யும் வேலையை கண்டு ஆசிரியர்களும் பெற்றோர்களும் வேதனை அடைந்துள்ளனர். மேலும் இந்த சமுதாயம் எங்கு செல்கிறது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து பதிவித்து வருகின்றனர்.
