#image_title
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விஜய் நடிப்பில் கடைசியாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் ரிலீஸ் ஆனது. அடுத்ததாக தனது 69-ஆவது படத்தில் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்துடன் சினிமாவில் இருந்து விலகி அரசியல் ஈடுபட போவதாக விஜய் அறிவித்தார். விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி விட்டார். சமீபத்தில் தான் தமிழக வெற்றி கழகம் கட்சியின் கொடியும் பாடலும் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மாதம் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெற உள்ளது.
தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படத்தில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்தை தொழில்நுட்பம் மூலம் பயன்படுத்தி உள்ளனர். அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய் உள்ளிட்ட பட குழுவினர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்றனர். அங்கு விஜய், பிரேமலதா, விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த நிலையில் செய்யாறு பாலு கூறியிருப்பதாவது விஜயின் சினிமா வாழ்க்கையில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் விஜயகாந்த்.
#image_title
அப்படி இருக்க விஜய்யின் சண்முக பாண்டியனுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். விஜயகாந்தின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த விஜய் மீது செருப்பை தூக்கி எறிந்தார்கள். அதையெல்லாம் அவர் கண்டு கொள்ளவே இல்லை. கடைசியா விஜயகாந்த் வீட்டிற்கு விஜய் சென்று இருந்த போது நன்றி சொல்வதற்காக மட்டும் வரவில்லை. இப்ப நான் நன்றி சொல்வதற்காக வந்திருக்கேன். அடுத்து ஒரு அரசியல் கட்சி தலைவராக வந்தாலும் வருவேன் என கூறியதாக செய்யாறு பாலு கூறியுள்ளார்.
அப்போது பிரேமாதா விஜய பிரபாகரன் ஆகியோர் மகிழ்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். விஜயகாந்த் இறந்த பிறகு தேமுதிக கட்சி அவ்வளவுதான் என பலரும் சொன்னார்கள். ஆனால் விஜய பிரபாகரன் தனி ஆளாக நின்று குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் தோல்வியுற்றார். இது கூட விஜய்க்கு நம்பிக்கையூட்டும் விதமாக இருந்திருக்கலாம். வருகிற 2026 வது தேர்தலில் விஜயன் கட்சி, விஜய் பிரபாகரன், அதிக இளைஞர்கள் வாக்குகளை கொண்ட சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை இணைந்தால் பெரிய வாக்கு வங்கியை உருவாக்கலாம் என செய்யாறு பாலு கூறியுள்ளார்.
கோவை தேர்தல் களம் தற்போது உச்சக்கட்ட அரசியல் பரபரப்பில் தகித்துக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, கோவை தெற்கு தொகுதியில் திமுகவினர் வாக்காளர்களுக்குப்…
உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் இதயத் துடிப்பாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல் போக்குவரத்தை மீட்டெடுப்பது குறித்து…
உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இதயத் துடிப்பாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை, தற்போது அமெரிக்க - ஈரான் இடையிலான போர்…
பிரிட்டனின் வால்சால் பகுதியில் ஒரு பெண்ணின் வீட்டிற்குள்ளேயே புகுந்து நடத்தப்பட்ட மிகக் கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவம் தற்போது பர்மிங்காம்…
மும்பையில் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவாக பாஜகவினர் நடத்திய பேரணியால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைக் கண்டு ஆத்திரமடைந்த இளம்பெண் ஒருவர்,…
தமிழக அரசியலில் நடிகர் விஜயன் 'தமிழக வெற்றிக் கழகம்' ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்தும், அவர் மீதான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுக்கும்…