பணிப்பெண் To பிரபல நடிகை… சில்க் ஸ்மிதா கடந்து வந்த பாதை…

Spread the love

தமிழ் சினிமாவில் 1980களில் எந்த நடிகையும் பெறாத பிரபலத்தையும் புகழையும் பெற்று திகழ்ந்தவர் சில்க் ஸ்மிதா. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஏலூரு என்ற கிராமத்தில் பிறந்தவர் சில்க் ஸ்மிதா. இவரின் இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். இவர் தமிழை பூர்வீகமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.

சிறுவயதில் இருந்து சினிமாவின் மீது ஆர்வம் கொண்ட சில்க் ஸ்மிதா குடும்ப வறுமையின் காரணமாக பள்ளி படிப்பை நான்காம் வகுப்பு உடன் நிறுத்தினார். மிகுந்த வறுமையின் கோட்டிற்கு கீழே இருந்தது சில்க் ஸ்மிதாவின் குடும்பம். குடும்பச் சூழலால் சிறுவயதிலேயே சுமிதாவிற்கு அவரது குடும்பம் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. கணவர் மற்றும் மாமியாரின் கொடுமையினால் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார் சில்க் ஸ்மிதா.

சினிமாவில் சாதிக்க வேண்டும் என்றால் சென்னைக்கு வர வேண்டும். அதனால் சென்னைக்கு வந்து தனது உறவினர்கள் வீட்டில் வீட்டு வேலை செய்து சினிமா வாய்ப்புக்காக காத்திருந்தார் சில்க் ஸ்மிதா. பிறகு வினுசக்கரவர்த்தி கண்ணில் பட்ட சிலக் ஸ்மிதா அவரை வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் நடிக்க வைத்தார். ஆரம்பத்தில் சாவித்திரி, சுஜாதா, சரிதா போல நல்ல கதாபாத்திரம் ஏற்று நடிகையாகவே ஆக வேண்டும் என்று விருப்பப்பட்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை ப்படி அமையவில்லை.

முதல் படத்திலேயே சாராயம் விற்கும் பெண் வேடம் அவருக்கு கிடைத்தது. எனினும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி நன்றாக கச்சிதமாக நடித்திருந்தார் சில்க் ஸ்மிதா. ஆனால் அந்த படத்திற்கு பிறகு அவரது வாழ்க்கை பாதையில் மாற்றம் ஏற்பட தொடங்கியது. சினிமாவிற்கு சுமிதா என்று தன் பெயரை மாற்றிக் கொண்டாலும் அவர் முதல் படத்தில் நடித்த கதாபாத்திரத்தின் பெயரான சில்க் அவர் பெயருடன் ஒட்டிக்கொண்டு சில்க் ஸ்மிதா என்ற மக்கள் இவரை அழைக்க ஆரம்பித்தனர்.

தொடர்ந்து கவர்ச்சியான கதாபாத்திரங்கள் கிடைக்கவே எதையும் தட்டிக் கழிக்காமல் கச்சிதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் சில்க் ஸ்மிதா. கவர்ச்சி இவரை தேர்ந்தெடுத்துக் கொண்டது. இவரின் வசீகரிக்கும் கண்கள் அனைவரையும் மயக்க செய்தது. சில்க் ஸ்மிதாவுடன் நடிப்பதற்கு அனைத்து நடிகர்களும் விருப்பப்பட்டனர். அவ்வளவு படத்திலும் கமிட் ஆகி பிஸியாக ஓடிக் கொண்டிருந்தார் சில்க் ஸ்மிதா.

படு பிஸியாக புகழில் உச்சத்தில் இருந்த சில்க் ஸ்மிதா படத்தில் நடிக்க அவருக்கு டேட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை தான் இயக்கும் படத்தில் ஒரு பாட்டிலாவது சில்க் ஸ்மிதா நடித்து நடனம் ஆடி விட வேண்டும் என்று விரும்பினார்கள் இயக்குனர்கள். ஏனென்றால் சில்க்ஸ்மிதா அந்த படத்தில் தோன்றியிருந்தால் படமே ஹிட்டுதான். அவரை பார்ப்பதற்காகவே மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அப்படி சொக்க வைக்கும் கண்களும் ஆடரை கவர்ந்திழுக்கும் உடல் வனப்பு என இந்திய சினிமாவையே புரட்டி போட்டு புகழின் உச்சிக்கு சென்று அனைவரையும் ஆச்சரிபட செய்தவர்.

ஏவிஎம் ஸ்டுடியோ முன்பு நின்ற போது ஒரு 16 17 வயது பெண் என்னை கடந்து சென்றாள் அவரது அவளது கண்கள் என்னை கவர்ந்து என்னை ஆச்சரியப்படுத்தியது. உடனே தான் அவளை நடிக்க வைத்தேன் என்று வினுசக்கரவர்த்தியே சில்க் ஸ்மிதாவை பற்றி கூறியிருக்கிறார். என்னதான் படத்தில் கவர்ச்சியாக நடித்தாலும் சில்க் ஸ்மிதா ஒரு தீ பிளம்பு போன்றவர். யாரையும் தன் அருகே நெருங்க விடாதவர். குறைந்த நட்பு வட்டாரத்தையே கொண்டிருந்தவர். அப்போதிருந்த உச்சபட்ச நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கியவர் சில்க்ஸ்மிதா. குறுகிய காலகட்டத்தில் 450 க்கும் அதிகமான படங்களில் நடித்து கோடிக்கணக்கில் சம்பளம் பெற்றவர் சில்க் ஸ்மிதா.

வாழ்க்கையில் புகழின் உச்சியில் இருந்து அனைத்தும் கிடைத்த சில்க் ஸ்மிதாவிற்கு அவரது தனிப்பட்ட வாழ்க்கை இருளாகவே அமைந்தது. அவர் ஏங்கிய அன்பு உண்மையாக நேர்மையாக அவருக்கு கிடைக்கவே இல்லை. அவரை நாடி வந்த ஆண்கள் அனைவரும் அவரது உடலுக்காகவே வந்தனர். அவர் தன்னை அனைவரும் பொம்மையாக அனைவரும் பார்க்கிறார்களா என்று மன உளைச்சலுக்கு ஆளானார். இப்படி ஒரு கட்டத்திற்கு பிறகு சில்க் ஸ்மிதாவையே பத்திரிகையாளர்கள் தாக்கி எழுதவும் விமர்சிக்கவும் ஆரம்பித்து விட்டனர். பரபரப்பிலும் புகழிலும் உச்சத்தில் இருந்த சில்க் சுமிதா 1996 ஆம் ஆண்டு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக் கொண்டார். இது இந்தியா முழுவதும் பேசும் பொருளாக மாறியது. அவர் ஏன் உயிரை மாய்த்துக் கொண்டார் தற்கொலை தானா கொலைதானா என்பதை பற்றிய உண்மை எதுவும் இதுவரை வெளிவரவில்லை.

admin

Recent Posts

“ஈரான் தூக்குமேடையில் 8 பெண்கள்”… 16 வயது சிறுமி முதல் மருத்துவர் வரை… களத்தில் குதித்த டிரம்ப் – உலகையே உலுக்கிய அந்த ஒரு பதிவு…!

ஈரானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள எட்டு பெண்களை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள கோரிக்கை…

1 minute ago

20 வருடத் தலைவலி.. மொட்டை அடித்த பின் காத்திருந்த பேரதிர்ச்சி… அந்த வாலிபனின் மண்டைக்குள் இருந்தது என்ன? டாக்டர்களே அதிர்ந்து போன அந்த ஒரு நிமிடம்…!!!

தன் வாழ்நாள் முழுவதும் தலைமுடியை தண்ணீரில் நழுவும் போதெல்லாம் தாங்க முடியாத தலைவலியால் அவதிப்பட்ட ஒரு வாலிபனின் கதை இது.…

4 minutes ago

ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு…. 60 பில்லியன் டாலரில் கர்சரை தட்டித்தூக்கிய எலான் மஸ்க்…. இனி கோடிங் செய்ய ஆளே தேவையில்லையா..?

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தை பங்குச்சந்தையில் பட்டியலிடும் முன், ஏஐ (AI) கோடிங்…

5 minutes ago

“ஒரு கைகுலுக்கல்.. ஒரு சென்டிமென்ட்”… தமிழகத் தேர்தல் கிளைமாக்ஸ்: மௌனக் காலத்தில் நடக்கும் ‘நிழல்’ யுத்தம் – முழு ரிப்போர்ட்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலின் பரபரப்பான பிரசாரங்கள் ஓய்ந்து, தற்போது நிலவும் 'மௌனக் காலம்' என்பது வெறும் அமைதி மட்டுமல்ல, அது…

9 minutes ago

நடுரோட்டில் அராஜகம்!… புர்கா அணிந்த பெண்ணின் கையை முறுக்கி மிரட்டல்… அந்த நபர் செய்த காரியம்… பார்த்தால் ரத்தம் கொதிக்கும்!… வைரலாகும் சிசிடிவி காட்சி…!!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் நடந்த இந்தச் சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது மற்றும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. மக்கள் நடமாட்டம்…

14 minutes ago

காதல் என்ற பெயரில் இப்படியொரு நரகமா?… துப்பட்டாவைப் பிடித்து இழுத்து மிரட்டல்… நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை… இணையத்தில் தீயாய் பரவும் காட்சி…!!!

இந்த வீடியோவில் நீங்கள் விவரிக்கும் காட்சிகள் உண்மையிலேயே மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. பொது இடத்தில் ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொள்வது, அவர்…

36 minutes ago