அதிர்ச்சி..! தினமும் பானிபூரி சாப்பிட செல்லும் பள்ளி மாணவி… Friend ஆன மருத்துவ கல்லூரி மாணவன்… ஒவ்வொரு நாளும் போதைப்பொருள் கொடுத்து வீட்டில்.. சென்னையை அதிரவைத்த சம்பவம்..!!

Spread the love

சென்னையில் பள்ளி மாணவி ஒருவருக்கு நேர்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவம், சமூகத்தில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒரு பள்ளி மாணவி தனது பள்ளிக்கு அருகிலுள்ள பானி பூரி கடையில் தினமும் சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதே கடைக்குத் தொடர்ச்சியாக வந்த ஒரு மருத்துவக் கல்லூரி மாணவருடன் அந்தச் சிறுமிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பைப் பயன்படுத்திக் கொண்ட அந்த மாணவன், சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று போதைப்பொருள் கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

தொடர்ச்சியாகப் போதைப்பொருள் கொடுக்கப்பட்டதால், அந்தச் சிறுமி அதற்கு அடிமையாகியுள்ளார். அந்தப் போதைப்பொருளுக்காக அவர் அந்த மாணவனைத் தேடிச் செல்லத் தொடங்கிய நிலையில், நிலைமையைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட அந்த மாணவன் தனது நண்பர்களுக்கும் அந்தச் சிறுமியை அறிமுகப்படுத்தியுள்ளான். போதைப்பொருள் மற்றும் தொடர் வன்கொடுமையால் அந்தச் சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்துள்ளார். சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவனது பெற்றோர், அவரை ரகசியமாகக் கண்காணித்தபோதுதான் இந்தத் திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

இது தொடர்பாகப் புகாரளிக்கப்பட்ட நிலையில், மருத்துவக் கல்லூரி மாணவர் வசந்த் கிரிஷ் மற்றும் அவரது நண்பர்களான சதீஷ், விஷால், பிரசன்னா ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கல்லூரிப் பேராசிரியர் என்பது கூடுதல் அதிர்ச்சியை அளிக்கிறது. வட மாநிலங்களில் நடப்பதாகக் கேள்விப்பட்ட இத்தகைய கொடூரங்கள் இப்போது நம் சென்னையிலும் அரங்கேறியுள்ளது. ‘பெண் விடுதலை’ பேசும் இன்றையச் சூழலில், இது போன்ற கயவர்களிடம் இருந்து உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

Soundarya

Recent Posts

தர்பூசணியா? இல்லை விஷமா? வெட்டும்போது பொங்கிய வெள்ளை நுரை .. இணையத்தை அதிர வைக்கும் பகீர் வீடியோ..!

பிரபல யூடியூபர் கௌரவ் தனேஜா தான் வாங்கிய தர்பூசணி ஒன்றில் இருந்து நுரை பொங்கி வழியும் வீடியோவை சமூக வலைதளங்களில்…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… மஞ்சள் நீராட்டு விழாவில் நேர்ந்த விபரீதம்.. முகத்தில் பூசிய மஞ்சளால் வீங்கிய உதடுகள் – கண்ணீரில் மணப்பெண்..

மத்தியப் பிரதேச மாநிலம் கர்கோன் மாவட்டத்தில், திருமணச் சடங்கின் போது பூசப்பட்ட மஞ்சள் அலர்ஜியானதால் மணப்பெண் ஒருவரின் முகம் வீங்கிப்போன…

5 மணத்தியாலங்கள் ago

வாழ்வா? சாவா? நொடிக் கணத்தில் தப்பிய உயிர்.. ராஜநாகத்துடன் நேருக்கு நேர் மோதிய நாய் – இணையத்தை அதிர வைக்கும் பகீர் காட்சி..!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், புதர்கள் நிறைந்த ஒரு பகுதியில் நாய்க்கும் ராஜநாகத்திற்கும் இடையே நடந்த கடுமையான…

5 மணத்தியாலங்கள் ago

பகீர்… டெலிவரி பாய் வேடத்தில் வந்த கொள்ளையன்.. கோயில் வளாகத்திலேயே கைவரிசை – சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி..!

உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பாலாஜி கோயில் வளாகத்தில், டெலிவரி பாய் வேடத்தில் வந்த வாலிபர்…

6 மணத்தியாலங்கள் ago

சச்சினையே சொக்க வைத்த குட்டி இன்ஜினியர்… திறமைக்குத் தடை ஏது?.. கார் தயாரித்த கிராமத்துச் சிறுவன்.. வைரலாகும் வீடியோ..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், கிராமப்புறத்தைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் தங்களின் கைவினைத் திறமையால் ஒரு சிறிய…

6 மணத்தியாலங்கள் ago

தந்தையே எமனாக மாறிய அவலம்!” – மகனைத் தீர்த்துக்கட்டிவிட்டு தானும் முடித்துக் கொண்ட தந்தை; ஒரு நொடி ஆத்திரத்தால் சிதைந்த குடும்பம்.!

ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் குடும்பத் தகராறு காரணமாக தந்தை ஒருவரே தனது 5 வயது மகனைக் கொலை செய்துவிட்டு, தானும்…

6 மணத்தியாலங்கள் ago