ஹைதராபாத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் சன்ரைசர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியின் போது, ஹைதராபாத் ரசிகர் ஒருவர் மாந்திரீகத்தில் ஈடுபட்டதாக ஒரு வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிவம் துபே விக்கெட்டை வீழ்த்துவதற்காக அந்த ரசிகர் ‘பிளாக் மேஜிக்’ செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சென்னை அணி நிர்வாகம் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் (BCCI) அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளதாகக் கூறப்படும் செய்திகள் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளன.
பரபரப்பான இந்தப் போட்டியில் சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஏற்கனவே தொடர் தோல்விகளால் துவண்டுள்ள சிஎஸ்கே ரசிகர்களுக்கு, இந்த மாந்திரீகப் புகார் செய்தி மேலும் அதிர்ச்சியை அளித்துள்ளது. விளையாட்டு மைதானத்தில் இத்தகைய செயல்கள் அனுமதிக்கப்படக் கூடாது என ஒருதரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இந்த விவகாரத்தில் சிஎஸ்கே நிர்வாகம் உண்மையில் புகார் அளித்துள்ளதா என்பது குறித்த அதிகாரப்பூர்வமான உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை
தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மாத்திரை உறைகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் இந்தி மொழியும் இடம்பெற்றிருந்தது அண்மையில் பெரும்…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு அளித்து…
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்து, குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ்…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 'டோரதி' திரைப்படம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் தங்கி போட்டித் தேர்வுகளுக்குப் படித்து வந்த விசாகா என்ற மாணவி, கடந்த செப்டம்பர் 29-ஆம்…
குஜராத் மாநிலம் அகமதாபாத் மாவட்டத்தில் உள்ள விரம்காம் வட்டம், சச்சானா கிராமத்தில் வீட்டின் கதவு அமைப்பது தொடர்பாக இரு குழுக்களுக்கு…