நேற்று வரை சிரித்துக்கொண்டிருந்தவர்… வாக்கிங் சென்றவருக்கு நேர்ந்த சோகம்… திரையுலகைக் கண்ணீரில் ஆழ்த்திய பாக்யராஜின் கடைசி தருணங்கள்…!

Spread the love

தமிழ் சினிமாவின் “திரைக்கதை மன்னன்” என்று போற்றப்படும் மூத்த இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் (73) இன்று காலை காலமானார். கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் தனது குடும்பத்துடன் கலந்துகொண்டுவிட்டு சென்னை திரும்பிய அவர், இன்று காலை வழக்கம்போல் நடைப்பயிற்சி (வாக்கிங்) சென்றுள்ளார். வீட்டிற்கு வந்தவுடன் திடீரென நெஞ்சு வலிப்பதாகக் கூறியதை அடுத்து, உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தது ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் பிரபலங்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கோவாவில் நேற்று முன் தினம் வரை தங்களுடன் மகிழ்ச்சியாகப் பேசிவிட்டு, அதற்குள் இப்படி ஒரு துயரச் செய்தி வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என நடிகை சுஹாசினி மணிரத்னம் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார். 1953 ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராகத் தன் திரைப்பயணத்தைத் தொடங்கினார். ’16 வயதினிலே’ திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பின்னர் 1979 இல் ‘புதிய வார்ப்புகள்’ படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்தார். எளிய மனிதர்களின் வாழ்வியலையும் சுவாரசியமான திரைக்கதையையும் கையாள்வதில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்தவர் அவர்.

அவரது மறைவுச் செய்தியைக் கேட்டு, திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். குறிப்பாக, அவரிடம் உதவி இயக்குநர்களாகப் பணியாற்றிப் பின்னாளில் புகழ்பெற்ற இயக்குநர்களாகவும் நடிகர்களாகவும் உயர்ந்த பார்த்திபன், பாண்டியராஜன் உள்ளிட்டோர் தங்களது குருநாதரின் உடலுக்கு முதலில் வந்து அஞ்சலி செலுத்தினர். மேலும், தமிழக முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பாக்யராஜின் இல்லத்திற்கு நேரில் சென்று, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.

Visaka

Recent Posts

“வாவ்”… ஹோட்டல் மாடியில் ஹெலிகாப்டர்?… வாயடைத்து நின்ற குழந்தை…மும்பையில் நடந்த ஆச்சரியம்…!!

மும்பையின் கோரேகாவ் பகுதியில் அமைந்துள்ள வெஸ்டின் ஓட்டல் கட்டிடத்தின் மேல்தளத்தில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்கி, மீண்டும் புறப்படுவதை சிறு குழந்தை…

12 seconds ago

“ஆட்சியை கவிழ்க்க ஒரே ஒரு போன் கால் போதும்”…. “தூக்கியெறியப்படும் ஆட்சி?”… காங்கிரஸின் 5 எம்.எல்.ஏ-க்களால் முதலமைச்சர் விஜய்க்கு வந்த பேரதிர்ச்சி…!

தமிழக அரசியலில் தவெக - காங்கிரஸ் கூட்டணியிடையே வெடித்துள்ள பிரதமர் வேட்பாளர் குறித்த வார்த்தை மோதல் தற்சமயம் பெரும் பரபரப்பை…

4 minutes ago

“லிப்ட் தானே கொடுத்தேன்…” மனைவி, வாலிபரை தாக்கிய கணவன்… நடுரோட்டில் ரகளை… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பஹேடி காவல் எல்லைக்குட்பட்ட நகரி பைபாஸ் சாலையில் நடுரோட்டில் வைத்து நடந்த…

4 minutes ago

“பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா?”… அத்துமீறிய நபர்… நடுரோட்டில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்… பதற வைக்கும் சிசிடிவி காட்சி…!!

நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பிரபலமான தாமெல் பகுதியில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.…

8 minutes ago

BREAKING: செங்கோட்டையன் பதவி பறிப்பு…. CM விஜய் எடுத்த அதிரடி முடிவு… காலையிலேயே அரசியலில் பரபரப்பு….!

அதிமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகச் சிறப்பாகச் செயல்பட்ட K.A. செங்கோட்டையனின் துறை விரைவில் மீண்டும் மாற்றப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.…

9 minutes ago

“கடைசியில் இப்படி ஒரு பிளானா?”… தவெக-வுக்கு செக் வைக்க ஸ்டாலின் எடுத்த ஆபத்தான முடிவு… அறிவாலயத்தில் கசிந்த ரகசியம்…!

தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சியால் திமுக சுணக்கமடைந்துவிட்டது என்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், தொண்டர்கள் மத்தியில் தேக்கநிலையைப் போக்கி உற்சாகத்தை…

12 minutes ago