உத்தரப் பிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள பஹேடி காவல் எல்லைக்குட்பட்ட நகரி பைபாஸ் சாலையில் நடுரோட்டில் வைத்து நடந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப் பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், தனது சொந்த வேலை காரணமாக வெளியே சென்றுள்ளார்.
அப்போது, வழியில் வந்த தனக்கு அறிமுகமான இளைஞரின் காரில் லிஃப்ட் கேட்டு ஏறியுள்ளார். ஆனால், மனைவி மீது ஏற்கனவே சந்தேகம் கொண்டிருந்த கணவர், யாருக்கும் தெரியாமல் மனைவியைப் பின்தொடர்ந்து வந்துள்ளார். கார் நகர்ந்து நெடுஞ்சாலையை அடைந்ததும், திடீரென காரை மறித்த கணவன், காரில் இருந்து மனைவியையும், லிஃப்ட் கொடுத்த கார் டிரைவரையும் கீழே இழுத்து நடுரோட்டிலேயே சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
ஒரே சமூகத்தைச் சேர்ந்த அவர்கள் இருவரையும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்த நிலையில், கணவன் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த பஹேடி பகுதி போலீசார், நடுரோட்டில் நடந்த தாக்குதல் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…
கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…
தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு…
நேபாள நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு பேரழிவு உருவாகியுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு…
கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும்…