ரூ.75,000 கடனால் வந்த வினை…. தந்தையைக் கொன்று தம்பியே ஆடிய பயங்கர நாடகம்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை…!

Spread the love

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பங்கார்பேட்டை தாலுகா விஜயநகர் லே-அவுட் பகுதியில் வசித்து வந்த 70 வயதான வெங்கடகிருஷ்ணபாபு என்பவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் வினேஷ்கர் கடந்த நான்கு ஆண்டுகளாக பெங்களூரில் தனியாக வசித்து வரும் நிலையில், இளைய மகன் சீமேஷ்கர் (35) தன் தந்தையுடன் வசித்து வந்தார். பல இடங்களில் சுமார் ரூ.75,000 வரை கடன் வாங்கியிருந்த சீமேஷ்கர், கடனாளிகளின் நெருக்கடி தாங்க முடியாமல் கடனை அடைப்பதற்காகத் தந்தையிடம் தொடர்ந்து பணம் கேட்டு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், தந்தை பணம் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி இரவு தந்தைக்கும் மகனுக்கும் இடையே பண விஷயமாக மீண்டும் காரசாரமான வாக்குவாதம் வெடித்தது. இதில் ஆத்திரமடைந்த சீமேஷ்கர், வீட்டிலிருந்த இரும்புத் தடியால் தந்தையின் தலையில் பலமாகத் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த வெங்கடகிருஷ்ணபாபுவை சிகிச்சைக்காகப் பெங்களூரில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தந்தையின் இறப்பால் பீதியடைந்த சீமேஷ்கர், தன் மீது சந்தேகம் வராமல் இருக்க உடனடியாக ஒரு பொய்யான நாடகத்தை அரங்கேற்றினார்.

தன் அண்ணன் வினேஷ்கருக்குப் போன் செய்த சீமேஷ்கர், மர்ம கும்பல் ஒன்று வீட்டிற்குள் நுழைந்து தந்தையைக் கடத்த முயன்றதாகவும், தடுத்தபோது அவரைத் தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாகவும் கூறி ஏமாற்றினார். இதனை உண்மை என நம்பிய அண்ணன் வினேஷ்கர், பங்கார்பேட்டை காவல் நிலையத்தில் உடனடியாகப் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்தபோது, மர்ம நபர்கள் யாரும் வீட்டிற்குள் வந்து சென்றதற்கான எந்தவொரு தடயமும் கிடைக்கவில்லை.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக, சீமேஷ்கரிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அவரைத் தங்கள் பாணியில் மடக்கி விசாரித்தனர். இறுதியில், கடனை அடைக்கப் பணம் தராத ஆத்திரத்தில் தந்தையை இரும்புத் தடியால் அடித்துக் கொன்றதை அவர் ஒப்புக்கொண்டார். தந்தையைக் கொன்றுவிட்டு நாடகமாடி போலீசாரை ஏமாற்ற முயன்ற சீமேஷ்கரை பங்கார்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Nanthini

Recent Posts

“அய்யோ காப்பாத்துங்க..!” அதிவேகத்தில் வந்த கார்… நடுரோட்டில் அலறல் சத்தம்… கல்லூரி மாணவிகளுக்கு நேர்ந்த கொடூரம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே நிகழ்ந்த கோர விபத்தில் இரண்டு கல்லூரி மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். பொத்தேரியில் உள்ள தனியார்…

8 minutes ago

“அம்மா எங்கே?”… தவிக்கும் 3 பச்சிளங் குழந்தைகள்… தாயின் உயிரைக் குடித்த குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை… கதறும் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டம் கருமந்துறை அடுத்த மோதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவருக்கும் மாதேஸ்வரன் என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே இரண்டு குழந்தைகள்…

18 minutes ago

ஒற்றைக் காலில் 400 மீட்டர்…! ஊன்றுகோல் கூட இல்லாத ஏழ்மை… ஒரு வீடியோவால் மாறிய விதி… அரசு செய்த நெகிழ்ச்சி உதவி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் பலியா மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ராகினி, கல்வி மீதான தனது அளப்பரிய ஆர்வத்தால்…

25 minutes ago

மாவட்ட அரசியலில் இருந்து விலகல்…. மகனுக்காக KN நேரு எடுத்த அந்த ஒரு முடிவு…. அலறும் அறிவாலயம்….!

திருச்சி திமுகவில் முதன்மைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.என். நேருவின் மகனுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு வழங்கப்படவில்லை…

43 minutes ago

கரூர் இடைத்தேர்தலில் திடீர் திருப்பம்…. தவெகவுக்கு செக் வைக்க செந்தில் பாலாஜி போட்ட “சீக்ரெட்” பிளான்… காலையிலேயே பரபரப்பு..!

கரூர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தை வீழ்த்துவதற்காக திமுக மூத்த தலைவருமான செந்தில்பாலாஜி தீவிர தேர்தல் உத்திகளை வகுத்து…

46 minutes ago

ஐயோ… என் குழந்தையை காப்பாத்துங்க… பெண்ணின் அலறல் சத்தம்… நடுரோட்டில் நடந்த மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்… பதறும் CCTV வீடியோ…!

தெருவில் தன் குழந்தையுடன் நடந்து சென்ற பெண்ணை ஒருவன் திடீரென வழிமறித்துத் துன்புறுத்தியபோது, அந்த வழியாகச் சென்றவர்கள் அதைப் பொருட்படுத்தாமல்…

1 மணத்தியாலம் ago