கொளத்தூர் தொகுதி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT தாள்களில் குளறுபடிகள் நடந்ததாகக் கூறி, 100% VVPAT தாள்களையும் மறுஎண்ணிக்கை செய்து தன்னை வெற்றிபெற்றவராக அறிவிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் “ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல” எனத் தள்ளுபடி செய்துள்ளது. தேர்தல் முடிவுகளை அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 329(b)-ன் கீழ் ‘தேர்தல் மனு’ மூலமாக மட்டுமே சவாலுக்கு உட்படுத்த முடியுமே தவிர, நேரடியாக ரிட் மனு தாக்கல் செய்ய முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய திமுக சட்டக் குழு திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகினாலும், ஸ்டாலினின் கோரிக்கை நிறைவேறுவது சட்ட ரீதியாகப் பெரும் சவால்கள் நிறைந்ததாகும். ஏனெனில், தேர்தல் வழக்குகளில் அரசியலமைப்புச் சட்ட விதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 80 தெளிவான நடைமுறைகளை வகுத்துள்ளதால், வழக்கமான ரிட் மனுக்கள் மூலம் உச்சநீதிமன்றம் இதில் நேரடியாகத் தலையிட்டு முடிவை மாற்றுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்றே சட்ட வல்லுநர்கள் கருதுகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…