நாங்க என்ன அடிமைகளா..? மனநலம் பாதிக்கப்படுது… ஊழியர்களை வாட்டி வதைக்கும் தனியார் நிறுவனங்கள்… இணையத்தில் கொந்தளிக்கும் பெண்ணின் வீடியோ வைரல்..!!

Spread the love

ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள சில தனியார் நிறுவனங்களின் பணிச் சூழல் குறித்து இளம் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அந்த வீடியோவில், அங்குள்ள நிறுவனங்களில் ஊழியர்கள் எதிர்கொள்ளும் கடுமையான பணிச்சுமை மற்றும் மன அழுத்தம் குறித்து அவர் அடுக்கடுக்கான புகார்களை முன்வைத்துள்ளார்.

குறிப்பாக, நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி நீண்ட நேரம் வேலை செய்ய வற்புறுத்தப்படுவதாகவும், ஊழியர்களை நடத்தும் விதம் மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ச்சியான வேலைப்பளு காரணமாக ஊழியர்களால் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த முடிவதே இல்லை என்றும், இது அவர்களின் மனநலத்தைப் பாதிப்பதாகவும் அவர் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. பல ஊழியர்கள் அந்தப் பெண்ணின் கருத்தை ஆதரித்து, தாங்களும் இதே போன்ற சூழலைச் சந்திப்பதாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். அதே சமயம், ஒரு தரப்பினர் இது ஒருதலைப்பட்சமான கருத்து என்றும், எல்லா நிறுவனங்களும் இப்படி இருப்பதில்லை என்றும் பதிவிட்டு வருகின்றனர். குருகிராம் போன்ற கார்ப்பரேட் நகரங்களில் நிலவும் நிதர்சனமான நிலையை இந்த வீடியோ பிரதிபலிப்பதாகப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Soundarya

Recent Posts

“ஷாக்… தேசிய கீதத்தின் போது 15 வயது இந்திய வீரருக்கு நேர்ந்த விசித்திர சம்பவம்… பின்னணியில் இருக்கும் உண்மை என்ன…?”

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியின் போது, தேசிய கீதம் இசைக்கப்பட்ட சமயம் வைபவ் சூர்யவன்ஷிக்கு…

5 மணத்தியாலங்கள் ago

“‘திருமணம் பிடிக்கலனா விட்ருக்கலாம்… எதுக்கு என் மகன கொன்னீங்க…?’ – கொலை வழக்கில் மனம் உடைந்து.. கண்ணீருடன் தந்தை எழுப்பிய… நியாயமான கேள்வி…!!”

மகாராஷ்டிராவின் புனே அருகே உள்ள லோகாட் கோட்டை பகுதியில், இளம் தொழிலதிபர் கேதன் அகர்வால் பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம்…

5 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு செக் வைக்க சீமானை களம் இறக்குகிறதா திமுக…? அம்பாசமுத்திரத்தில் அதிரடி திருப்புமுனை… பின்னணியில் மெகா கூட்டணி வியூகம்…!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள 6 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியை வீழ்த்த ஆளுங்கட்சியான திமுக தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.…

6 மணத்தியாலங்கள் ago

ச்சீ… பெற்ற தந்தை என்றும் பாராமல்… நிலத்துக்காக நடுரோட்டில் கொடூரமாக இழுத்துச் சென்று தாக்கிய பிஎஸ்எஃப் வீரர்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், நிலத் தகராறு காரணமாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் தனது வயதான தந்தையை…

6 மணத்தியாலங்கள் ago

மனிதநேயம் எங்கே போனது…? திருமண ஊர்வலத்தில் குதிரை மீது… நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

இந்தூர் மாவட்டம் கம்பேல் பகுதியில் உள்ள ஒரு திருமண ஊர்வலத்தின் போது, குதிரை ஒன்று நடனமாட மறுத்ததால் அதன் உரிமையாளர்…

6 மணத்தியாலங்கள் ago

த்ரிஷாவுக்கு திருமணத்தில் நம்பிக்கையே இல்லையா…? வைரலாகும் ‘தக் லைஃப்’ மேடை ரகசியம்…! த்ரிஷாவின் பழைய வீடியோ இப்போது திடீரென வைரலாவது ஏன்…?

திரையுலகில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை த்ரிஷா, எப்போதும் தனது தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில்…

6 மணத்தியாலங்கள் ago