கோவை சிங்காநல்லூர் அடுத்த இருகூரை பகுதியில் ரகுபதி மற்றும் தமிழ்ச்செல்வி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நான்கு வயதில் அபர்ணா ஸ்ரீ என்ற குழந்தையும் உள்ளது. தமிழ்ச்செல்வி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து குழந்தையுடன் தனியாக வசித்து வந்த நிலையில் நேற்று மதியம் குழந்தை அபர்ணா ஸ்ரீ திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே தமிழ்ச்செல்வி தன்னுடைய மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனிடையே குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் தமிழ்ச்செல்வி தான் குழந்தையை கொன்று விட்டதாகவும் உறவினர்கள் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தமிழ்செல்வி தனது குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்த நிலையில், தமிழ்ச்செல்வி ஒரு வருடமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் கட்டிட வேலைக்கு சென்ற போது அவருக்கு தன்னுடன் வேலை செய்யும் 35 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு அது கள்ளக்காதலாக மாறிய நிலையில் இருவரும் பலமுறை உல்லாசமாக இருந்துள்ளனர்.
இதனிடையே தமிழ்செல்வி தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்த நிலையில் அந்த வாலிபரிடம் இது குறித்து கேட்டபோது, தாராளமாக சேர்ந்து வாழலாம், ஆனால் உனது குழந்தையை அழைத்து வரக்கூடாது, குழந்தை இல்லாமல் நீ மட்டும் தனியாக வந்தால் சேர்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார். இதனால் தனது குழந்தையை விட கள்ளக்காதலன் தான் தமிழ்ச்செல்விக்கு முக்கியமாக தெரிந்ததால் தனது குழந்தையை கொலை செய்ய முடிவு செய்து விளையாடி கொண்டிருந்த குழந்தை வீட்டுக்கு வந்ததும் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பிறகு குழந்தை மயங்கி விட்டதாக உறவினர்களிடம் நாடகமாடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதை விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…