அடுத்த 2 நாட்களில் மெகா ட்விஸ்ட்!… தவெக-வில் ஐக்கியமாகும் காங்கிரஸ் முக்கிய புள்ளிகள்… அரசியலில் குண்டை தூக்கி போட்ட ஆதவ் அர்ஜுன்…!!!

Spread the love

சென்னையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜுனா, புதுச்சேரி அரசியலில் திமுக மற்றும் பாஜக இணைந்து காங்கிரஸை திட்டமிட்டு ஒழித்துவிட்டதாக அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்தார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு கள அரசியல் தெரியாது என்றும், அவர் டெல்லி லாபியையும் திமுகவையும் மட்டுமே நம்பி இருந்து ஏமாந்துவிட்டதாகவும் சாடினார். ஜெகத்ரட்சகன் மீதான அமலாக்கத்துறை வழக்கை வைத்து பாஜக அவரை அங்கு அனுப்பியதாகவும், இதனால் அங்கு காங்கிரஸ் தற்போது நடுத்தெருவில் நிற்பதாகவும், அக்கட்சியின் நிர்வாகிகள் பலர் தவெக வாசலில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய தலைவரான ப.சிதம்பரத்தையும் கடுமையாக விமர்சித்த ஆதவ் அர்ஜுனா, அவர் காங்கிரஸை தமிழகத்தில் வளரவிடாமல் தடுத்து வருவதாகக் கூறினார். இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாக போகிறார்கள். திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணி என்பது ஒரு ‘கட்டாயக் கல்யாணம்’ போன்றது என்றும், ராகுல் காந்திக்கு விஜய் மீது அன்பு இருந்தும், இங்குள்ள வயதான காங்கிரஸ் தலைவர்கள் ‘பெட்டி’ வாங்கிக்கொண்டு கட்சியை அடமானம் வைத்துவிட்டதாகத் தொண்டர்கள் புலம்புவதாகவும் தெரிவித்தார். இன்னும் இரண்டு நாட்களில் காங்கிரஸின் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் ஐக்கியமாகப் போவது உறுதி என்றும் அவர் சவால் விடுத்தார்.

திமுக தனது கூட்டணிக் கட்சிகளை நடத்தும் விதம் குறித்துப் பேசிய அவர், பாஜகவில் இருந்து வந்த தேமுதிகவுக்கு 10 தொகுதிகளும் ஒரு ராஜ்யசபா இடமும் வழங்கிய திமுக, 8 ஆண்டுகளாகக் கூட்டணியில் இருக்கும் கம்யூனிஸ்ட்களுக்கு வெறும் 5 இடங்களை மட்டுமே ஒதுக்கி அசிங்கப்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்குப் பிறகு திமுகவையும், டெல்லி அதிகாரத்தையும் ஒரே நேரத்தில் துணிச்சலாக எதிர்க்கும் ஒரே தலைவர் விஜய் மட்டும்தான் என்று முழங்கிய அவர், இதே நிலை நீடித்தால் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் காணாமல் போய்விடும் என்று எச்சரித்தார்.

Muthu Mani

Recent Posts

BREAKING: திமுக எம்எல்ஏ ராஜினாமா… சற்றுமுன் தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் தவெக மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியனின் சர்ச்சை பேச்சு, அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு புதிய…

9 மணத்தியாலங்கள் ago

பகீர்… மனைவியை அழைக்கச் சென்ற கணவன் மீது.. பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற மைத்துனர்…! நெஞ்சை உலுக்கும் கொடூரம்…!!

பஞ்சாப் மாநிலம் அம்ரித்சரின் லோபோகே கிராமத்தைச் சேர்ந்த லவ்பிரீத் சிங் என்பவருக்கு, கடந்த 9 மாதங்களுக்கு முன்பு சந்தீப் கவுர்…

9 மணத்தியாலங்கள் ago

திரிணாமுல் காங்கிரஸ்… மாநில தலைவர் ராஜினாமா… நிலைகுலைந்த மேற்கு வங்கம்…!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி மோதல் வெடித்துள்ள நிலையில், அக்கட்சியின் மாநிலத்…

9 மணத்தியாலங்கள் ago

பியூட்டி பார்லரில் கொடூரம்… பெண் ஊழியர்களின் குடிநீரில் மயக்க மருந்து கலந்த உரிமையாளர்…! நடுரோட்டில் செருப்பால் வெளுத்து வாங்கிய பெண்கள்…!!

ராஜஸ்தான் மாநிலம் சூரு மாவட்டத்தில் உள்ள சாதுல்பூர் பகுதியில் இயங்கி வரும் ஒரு பியூட்டி பார்லரின் உரிமையாளர், அங்கு பணிபுரியும்…

9 மணத்தியாலங்கள் ago

பாடம் நடத்தல… வெள்ளரிக்காய் சாப்பிடுறாங்க… கேள்வி கேட்ட பெற்றோர்… பிஞ்சு குழந்தைகளை வகுப்பறையை விட்டு வெளியே தள்ளிய அரசுப் பள்ளி ஆசிரியர்..! நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!

மத்தியப் பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்தில் உள்ள மாதாசுலா கிராமத்து அரசு ஆரம்பப் பள்ளியில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.…

9 மணத்தியாலங்கள் ago

Right Party, Wrong Leader: இபிஎஸ் குறித்து வைகைச்செல்வன்… இப்படி ஒரு வார்த்தையில் விமர்சிப்பார்னு யாரும் எதிர்பார்க்கல…!

அதிமுக ஒரு சரியான கட்சி; ஆனால் அதற்கு எடப்பாடி பழனிசாமி ஒரு தவறான தலைவர் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சரும்,…

9 மணத்தியாலங்கள் ago