ஒரு சின்ன கோழிக்குஞ்சு தகராறு…! “பக்கத்து வீட்டுக்காரரை கொன்று…” குற்றவாளிக்கு கிடைத்த தண்டனை… வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்…!!

Spread the love

சென்னையை அடுத்த ஆவடி அருகே, கோழிக்குஞ்சு தகராறில் ஒருவரைக் கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஆரிக்கம்பேடு பகுதியில் வசித்த சசிகுமார் என்பவரின் கோழிக்குஞ்சுகள், பக்கத்து வீட்டைச் சேர்ந்த அன்பழகன் என்பவரது காம்பவுண்ட் சுவரைச் சேதப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அன்பழகன் கல்லை தூக்கி எறிந்ததால் ஒரு கோழிக்குஞ்சு இறந்தது. இதனைச் சசிகுமார் தட்டிக்கேட்டபோது இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், அன்பழகன் பலமாகத் தாக்கியதில் சசிகுமார் உயிரிழந்தார்.

இந்தக் கொலை வழக்கு தொடர்பாக ஆவடி போலீசார் அன்பழகன் மற்றும் அவரது மனைவியைக் கைது செய்த நிலையில், பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அன்பழகனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். அவரது மனைவிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ஒரு சிறிய கோழிக்குஞ்சுக்காக ஏற்பட்ட தகராறு கொலையில் முடிந்து, ஒரு குடும்பத்தையே நடுத்தெருவுக்குக் கொண்டு வந்ததோடு, குற்றவாளிக்குச் சிறைத் தண்டனையையும் பெற்றுத் தந்திருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

பேரப்பிள்ளைகள் சொன்னாங்கன்னு ஓட்டுப் போடுறதா.? ஜனநாயகம் வேடிக்கையாகிடுச்சு… ஜனநாயகத்தை வெளுத்து வாங்கிய சீமான்..!!

பேரப்பிள்ளைகள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக அவர்களுக்கு ஓட்டுப் போட்டதாகச் சிலர் கூறும் அளவுக்குத் தற்போதைய ஜனநாயகம் வேடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது என்று…

8 மணத்தியாலங்கள் ago

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு: நாளை கடையடைப்பு.. தமிழகத்தில் 5,000 கடைகள் இயங்கும்..!!

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் நாளை (மே…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: உணவகத்தில் ஏசி வெடித்து விபத்து… 1 லட்சம் நிதியுதவி அறிவித்தார் CM விஜய்..!!

தஞ்சாவூர் கேஎஃப்சி (KFC) உணவகத்தில் ஏற்பட்ட ஏசி வெடிப்பு விபத்தில் உயிரிழந்த ரவி ராஜ் என்பவரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு முதலமைச்சர்…

9 மணத்தியாலங்கள் ago

“லேட்டா வந்தா அவ்ளோதான்”.. முதலமைச்சர் விஜய்யின் ‘பங்ச்சுவாலிட்டி’ உத்தரவால் பரபரப்பு.. தலைமைச் செயலகத்தில் அதிரடி மாற்றம்..!!

தமிழக முதலமைச்சராகப் விஜய் பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அவர் தினமும் காலை 9.30 மணி முதல் 10 மணிக்குள் மிகச்…

9 மணத்தியாலங்கள் ago

நீதி எங்கே போகிறது? சிறையில் இருந்து வந்த பாலியல் கைதிக்கு ஹீரோ ரேஞ்சுக்கு வரவேற்பு அளித்த ஆதரவாளர்கள்: வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!

உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர்,…

9 மணத்தியாலங்கள் ago

தினமும் பெட்ரோல் குடிக்கும் பெண்… “இது இல்லைனா எனக்கு தூக்கமே வராது” என அதிர வைக்கும் இளம்பெண்ணின் பகீர் போதை.!!

கனடாவைச் சேர்ந்த ஷானன் என்ற இளம் பெண், தினமும் பெட்ரோல் குடிக்கும் விசித்திரமான மற்றும் ஆபத்தான பழக்கத்திற்கு அடிமையாகி சமூக…

9 மணத்தியாலங்கள் ago