புனேவின் பிம்பிள் சௌதாகர் பகுதியில் கனமழை காரணமாகப் பெரிய மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்ததில், முதியவர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குணால் ஐகான் சாலையில் சனிக்கிழமை அதிகாலை இந்தத் துயரச் சம்பவம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் அப்பகுதியைச் சேர்ந்த எஸ். என். குதாலே (65) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதிகாலை வேளையில் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாகப் பிரம்மாண்டமான மரம் ஒன்று அவர் மீது நேராகச் சரிந்து விழுந்தது. இதில் அவர் மரத்தின் கிளைகளுக்கு இடையே மாட்டிக்கொண்டு பலத்த காயமடைந்தார். விபத்தைக் கண்ட அப்பகுதி மக்களும், காவல்துறையினரும், தீயணைப்புத் துறையினரும் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டு அவரை மீட்டனர்.
மீட்கப்பட்ட குதாலே உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தில் அவருடைய தலை மற்றும் முதுகெலும்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
தனது எண்ணெய் ஏற்றுமதி தடுக்கப்பட்டால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள வேறு எந்த நாடும் எண்ணெய் விற்க முடியாதவாறு எரிசக்தி…
பெண்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக விளங்கும் கருப்பை வாய் புற்றுநோயை வேரறுக்கும் நோக்கில் கர்நாடக அரசு புதிய மக்கள் நலத் திட்டத்தைத்…
தமிழகத்தில் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி காலை…
தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் தகவல்களைப் பதிவு செய்யும்…
சினிமா திரையரங்கிற்குள் இப்படி ஒரு அதிர்ச்சியா! புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் உள்ள சுபா திரையரங்கில் ‘ஜனநாயகன் ’ திரைப்படம் வெளியான…
1952-ஆம் ஆண்டு அமெரிக்காவின் போர்ட்டோ ரிகோவில் உள்ள சான் ஜூவான் நகரிலிருந்து நியூயார்க் நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட பயணிகள்…