சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக வெளியான ஜெயிலர் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. இத்திரைப்படத்தின் நிறைய கேரக்டர்கள் பெரிய அளவில் பேசப்பட்டது.
இதில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், படத்தின் வில்லனாக நடித்திருந்த விநாயகம் ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்திருந்தார்கள். அதே வரிசையில் தற்போது தமிழ் சினிமா ரசிகர்களால் வரவேற்பை பெற்ற நடிகர் தான் ஜாஃபர் சாதிக்.
பாவ கதைகள் என்னும் தலைப்பில் எடுக்கப்பட்ட வெப்சீரிஸில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய கதையில் வில்லனாக நடித்திருந்தவர் தான் இந்த ஜாஃபர் சாதிக். அந்த கதையிலேயே ரசிகர்களின் கவனத்தை அதிகமாக இவர் ஈர்த்துவிட்டார். அதற்கு முக்கிய காரணம் அவருடைய தோற்றம் மற்றும் வித்தியாசமான நடிப்புதான்.
அதைத்தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜால் கவனிக்கப்பட்ட இவர் உலகநாயகன் கமலஹாசன் நடித்த விக்ரம் படத்திலும் வில்லன் கேரக்டரில் நடித்திருந்தார். தன்னிடம் சண்டை போடுபவர்களின் கால் நரம்பை வெட்டிவிடும் வழக்கம் உடைய இவர் கமலஹாசனின் கால் நரம்பை வெட்டுவது போல் ஒரு காட்சி அமைந்திருக்கும். அப்போது கமல் கொடுக்கும் ரியாக்ஷன் மற்றும் வசனம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.
அந்த காட்சியின் மூலம் நடிகர் ஜாஃபர் சாதிக்கும் நல்ல பெயரை ரசிகர்களிடம் பெற்றார். தமிழ் சினிமாவில் அவ்வப்போது இதுபோன்ற வித்தியாசமான கேரக்டர்கள் திடீரென அறிமுகமாகி, பயங்கர வைரல் ஆவதுண்டு. அப்படித்தான் தற்போது இவரும் வைரல் ஆகி வருகிறார்.
சமீபத்தில் ஜாஃபர் தனது காதலியை இணையத்தில் அறிமுகப்படுத்தினார். அவரின் பெயர் சித்திக்கா ஷெரின் என்றும், அவர் ஒரு டான்சர் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ஜாபர் தற்பொழுது தனது காதலியுடன் நைட் அவுட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தெலுங்கானா மாநிலம் கம்மம் நகரைச் சேர்ந்த ஸ்ரீநாத் (23) என்ற இளைஞர், கடந்த 13-ஆம் தேதி இரவு தனது நண்பரின்…
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள மண்ணூர் பகுதியில், சொத்து தகராறில் பெற்ற மகனே லாரி ஏற்றி தந்தையைக் கொன்ற…
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க வீரர்களைப் பிடிப்பதற்கோ அல்லது கொல்வதற்கோ $30,000 வரை வெகுமதி வழங்கப்படும்…
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தில் உள்ள பொன்னியம்மன் கோவில் ஆடித் திருவிழாவின் போது எதிர்பாராத விதமாக கொடூரமான இரட்டைக்கொலை சம்பவம்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த அசோக் குமார், காரைக்காலில் பணிபுரிந்தபோது அங்குள்ள திருமணமான பெண் ஒருவருடன் தகாத உறவு ஏற்படுத்திக்…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தான் சந்தித்த நச்சுத் தன்மையுள்ள காதல் உறவைப் பற்றியும், அதில் ஏற்பட்ட மன உளைச்சல்கள் பற்றியும்…