Categories: சினிமா

கல்யாணம் எப்ப பண்ண போறீங்க…? காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை விமலா ராமன்…

Spread the love

ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்த, தமிழகத்தைச் சேர்ந்த நடிகை விமலா ராமன் 2004 ஆம் ஆண்டு ‘மிஸ் இந்தியா ஆஸ்திரேலியா’ பட்டத்தை கைப்பற்றியவர். பின்னர் மாடலிங் கவனம் செலுத்தி வந்த இவர், திரைப்பட வாய்ப்புகளையும் தேட துவங்கினார். அந்த வகையில், கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் இயக்குனர் கே பாலச்சந்தர் இயக்கிய பொய் என்கிற படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை விமலா ராமன்.

இந்த படத்தை தொடர்ந்து மலையாள திரை உலகில் நுழைந்தார். மலையாளத்தில் இவர் நடித்த டைம், சூரியன், நஸ்ராணி, ரோமியோ போன்ற படங்கள் அடுத்தடுத்து நல்ல வரவேற்பை பெற்றதால், பிஸியான நடிகையாக மாறினார் விமலா ராமன். இவர் தமிழில் ‘பொய்’ படத்தில் அறிமுகமாகி இருந்தாலும், இவருக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் சிறந்த அறிமுகத்தை கொடுத்தது என்றால் அது இயக்குனர் சேரன் நடித்து வெளியான ராமன் தேடிய சீதை திரைப்படம் தான்.

தமிழ், மலையாளத்தை தொடர்ந்து, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த ஒரு வருடமாகவே பிரபல நடிகர் வினய் மற்றும் விமலா ராமன் காதலித்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இது குறித்து இருவருமே வாய் திறக்காமல் இருந்தனர். தற்போது இவர்கள் தங்களது காதலை உறுதிப்படுத்தும் விதமாக அவ்வப்பொழுது இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்தவகையில் தற்பொழுது தனது காதலருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி நடிகை விமலா ராமன் வெளியிட்ட பதிவானது இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. இப்பதிவினை பார்த்த ரசிகர்கள் ‘கல்யாணம் எப்ப பண்ண போறீங்க…?’ என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

என்ன தைரியம் இருந்தா… என் பொண்ணு மேல கையை வைப்ப?… உணவகத்தில் தவறாகப் புரிந்து… முதியவரைத் தாக்கிய தந்தை… பதறவைக்கும் சிசிடிவி காட்சி…!

சிங்கப்பூர் உணவகத்தில் நிகழ்ந்த இந்தச் சம்பவம், மனித உறவுகளின் சிக்கலையும் அவசர முடிவுகளின் ஆபத்தையும் வெளிப்படுத்துகிறது. சிறுமியின் தலைமீது முதியவர்…

53 seconds ago

ஐயோ காப்பாத்துங்க… வெந்திரா கால்வாயில் நீந்தச் சென்ற… 5 மாணவர்கள் அடித்துச் செல்லப்பட்டு… 2 பேர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!

மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த ஐத்தம்புடி கால்வாய் சோகத்தின் சுவடுகள் மறைவதற்குள்ளேயே, பாலக்கோடேரு மண்டலம் வெந்திரா கிராமத்தில் மற்றுமொரு கொடூர…

4 minutes ago

மேடம்… 2 நிமிஷம் இருங்க… நள்ளிரவில் ஆள்நடமாட்டமில்லாத சாலையில் காரை நிறுத்திய ஓட்டுநர்… அடுத்த நடந்த ஷாக்கிங் சம்பவம்…!

மும்பையின் இரயில் நிலையத்திலிருந்து நள்ளிரவில் வெளியேறிய ஒரு இளம் பெண், தனது வீட்டிற்குச் செல்ல ஒரு டேக்சிக்காகக் காத்திருந்தாள். டேக்சி…

22 minutes ago

“ஐயோ… என் புருஷனை ஆளையே காணோம் சார்… அலமாரியில் ரத்தக் கறை… நள்ளிரவில் அலறல் சத்தம்… கிராமத்தையே உலுக்கிய பகீர் சம்பவம்…!”

அண்டை கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதி முழுவதையும் பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்த…

25 minutes ago

ஐயோ… என்ன இப்படி ஆகிடுச்சே… பேருந்து ஏறி தூய்மைப் பணியாளர் பலி… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

கோலாப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பராமரிப்புப் பணிமனையில், மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த எஸ்.டி…

37 minutes ago

அட கடவுளே… கையில மருந்து வாங்கக்கூட வழியில்லையே சாமி… கண்முன்னே வலிப்பில் துடிக்கும் 5 வயதுச் சிறுவன்… நெஞ்சிலடித்துக் கதறும் தாய்…!

ஒரு தாய்க்குத் தன் குழந்தையின் வேதனையை விடவா பெரிய துயரம் இருந்துவிட முடியும்? விளையாடும் வயதில் கைகளில் பொம்மைகளை ஏந்தி…

43 minutes ago