கர்நாடக மாநிலம் மைசூருவில், சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் மூலம் பள்ளி மாணவிகளுடன் பழகி, அவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த 34 வயது நபர் ஒருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். விஜயநகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு, இன்ஸ்டாகிராம் தளம் வழியாக இந்த நபரின் அறிமுகம் கிடைத்துள்ளது. நாளடைவில் சிறுமியின் தொலைபேசி எண்களைப் பெற்று தொடர்ந்து பேசி வந்த அந்த நபர், ஒரு கட்டத்தில் அச்சிறுமியைத் தனது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த கொடூரச் செயலைத் தனது கைபேசியில் வீடியோவாகப் பதிவு செய்து கொண்ட அந்த நபர், அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாகக் கூறி அச்சிறுமியைத் தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். இந்த மிரட்டலுக்குப் பயந்து அந்த மாணவி பலமுறை அவரது வீட்டிற்குச் செல்ல நேரிட்டது. அத்துடன் நிறுத்தாமல், அந்த வீடியோவைக் காட்டி மிரட்டியே, அந்த மாணவியின் தோழிகள் இருவரையும் தனது வீட்டிற்கு அழைத்து வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். வேறு வழியின்றி பயந்துபோன அந்த மாணவி, தனது தோழிகள் இருவரையும் அழைத்துச் செல்ல, அவர்களையும் அந்த நபர் மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்து, அதையும் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
மேலும் பல மாணவிகளைத் தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்து வருமாறு அந்த 3 மாணவிகளையும் அந்த நபர் தொடர்ந்து மிரட்டி, கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளார். இதனால் செய்வதறியாது திகைத்த மாணவிகள், இறுதியாகத் தங்களுக்கு நேர்ந்த இந்த கொடூரக் கொடுமைகள் குறித்து தங்களது பெற்றோரிடம் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள், உடனடியாக ஒரு மகளிர் அமைப்பின் உதவியுடன் விஜயநகர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தனர்.
பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் புகாரின் பேரில், காவல் துறையினர் போக்சோ உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அந்த நபரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், குற்றவாளியிடமிருந்த கைபேசியைக் கைப்பற்றிய போலீசார், அதை தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவிகளை இலக்காகக் கொண்டு சமூக ஊடகங்கள் வழியாக நடத்தப்பட்ட இந்த அதிர்ச்சிச் சம்பவம் மைசூருவில் பெரும் பரபரப்பையும், பெற்றோர்கள் மத்தியில் பெரும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் நர்சிங்பூர் மாவட்டம், கோடேகாவ் பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் ஏமாற்றி கடத்திச் செல்லப்பட்டு பாலியல்…
குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் உள்ள வீர்பரடா கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில், திடீரென நீரலைகள் பொங்கி எழுந்து அசைவுகள்…
பீகார் மாநில தலைநகர் பாட்னாவில் உள்ள NH -30 நெடுஞ்சாலையில் வெள்ளிக்கிழமை காலை ஒரு சோகமான விபத்து ஏற்பட்டது. மேற்கு…
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு காணொளியில், மலைப்பாங்கான பகுதியில் சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடும்போது, போதுமான ஆட்டக்காரர்கள் இல்லாததால்…
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் கல்தா கேட் பகுதியில், மூன்று குழந்தைகளுக்குத் தந்தையான முன்னா என்ற தையல் தொழிலாளி தனது வீட்டில்…
தலைமைச் செயலகத்தில் 25 விவசாய சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தமிழக காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர்…