அதிமுகவில் நள்ளிரவு அதிரடி…. வேற லெவலில் இறங்கி அடிக்கும் வேலுமணி… இபிஎஸ்-ஐ வீழ்த்த பாஜக கொடுத்த ‘அந்த’ மாஸ்டர் பிளான்…!

Spread the love

தமிழக அரசியல் களம் தற்போது முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடிகளுடனும் விறுவிறுப்புகளுடனும் நகர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூர் பொதுக்கூட்டத்தில் திமுகவை கடுமையாக விமர்சித்ததோடு, அதிமுகவை “தீர்ந்து போன சக்தி” என மறைமுகமாகச் சாடியிருந்தது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இந்த மேடைப் பேச்சுக்கு பின்னால், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளுடனும் எம்.எல்.ஏ-க்களுடனும் விஜய் தரப்பு நேரடித் தொடர்பில் இருப்பதும், அவர்களின் ஆதரவைத் திரட்ட திரைமறைவில் காய்கள் நகர்த்தப்பட்டு வருவதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்து தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அதிமுகவில் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பு எம்.எல்.ஏ-க்கள் போர்க்கொடி தூக்கத் தொடங்கினர். திமுக ஆட்சியை இழந்த சூழலில், தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வேண்டும் என்பதே இவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது. ஆனால், இதனை இபிஎஸ் திட்டவட்டமாக மறுத்ததால் அதிருப்தியடைந்த இந்த குரூப், சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பின்போது விஜய்க்கு ஆதரவாகச் செயல்பட்டது. இதன் தொடர்ச்சியாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட சிலர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்த நிலையில், வேலுமணி மற்றும் சண்முகம் தரப்பு தங்களது பதவிகளை ராஜினாமா செய்யப்போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. மீண்டும் ஓர் இடைத்தேர்தலைச் சந்திப்பது ரிஸ்க் என்பதால், பதவியில் நீடித்தபடியே அதிருப்தி எம்.எல்.ஏ-க்களாகச் செயல்பட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இந்தச் சூழலில், எஸ்பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தரப்பு, பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) ஆதரவோடு அதிமுகவை உடைக்கும் மாபெரும் மாற்றுத் திட்டம் ஒன்றை தீட்டி வருவதாக கொங்கு மண்டல அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுகவின் மொத்தமுள்ள 47 எம்.எல்.ஏ-க்களில் 22 பேர் வேலுமணி பக்கமும், 25 பேர் இபிஎஸ் பக்கமும் நின்றனர். தற்போது 5 பேர் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், எஸ்பி வேலுமணி தரப்பிடம் 15 முதல் 17 எம்.எல்.ஏ-க்களின் பலம் உள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தப்பிக்க வேண்டுமானால், சட்டமன்றக் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு (2/3) எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கட்டாயம் தேவை என்பதை அவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.

தற்போதைய நிலையில் அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் பலம் 42 ஆகக் குறைந்துள்ளதால், தவெகவுக்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்க வேலுமணி தரப்புக்கு குறைந்தது 28 அல்லது 29 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. இதற்காக எடப்பாடி பழனிசாமி முகாமில் இருக்கும் மேலும் சில எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்க, பாஜகவின் பின்புலத்தோடு சிவி சண்முகமும் எஸ்பி வேலுமணியும் தீவிரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ரகசிய வியூகத்தை மோப்பம் பிடித்துள்ள எடப்பாடி பழனிசாமி தரப்பு, தங்களது மீதமுள்ள எம்.எல்.ஏ-க்கள் எதிர்த்தரப்புக்குத் தாவுவதைத் தடுத்து நிறுத்தவும், கட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவும் தற்காப்புப் பணிகளில் போர்க்கால அடிப்படையில் இறங்கியுள்ளது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago