சமூக வலைதளங்களில் தற்பொழுது ஒரு சுவாரசியமான வீடியோ வைரலாகி வருகிறது. வழக்கமாக கிராமப்புறங்களில் குதிரை வண்டி, மாட்டு வண்டி அல்லது ஒட்டக வண்டிகளை நாம் பார்த்திருப்போம். ஆனால், இந்த வீடியோவில் ஒரு சிறுவன் நான்கு நாய்கள் இழுத்துச் செல்லும் ஒரு மர வண்டியில் அமர்ந்து சவாரி செய்யும் வினோதமான காட்சி இடம் பெற்றுள்ளது.
இந்த வீடியோவின் தொடக்கத்தில் ஒரு சாதாரண மர வண்டி தெரிகிறது. ஆனால் கேமரா நகரும் போது, அந்த வண்டியுடன் நான்கு நாய்கள் பிணைக்கப்பட்டிருப்பது தெரியவருகிறது. அந்த நாய்கள் அனைத்தும் எவ்வித அவசரமும் இன்றி மிக நிதானமாக வண்டியை இழுத்துச் செல்கின்றன. அதன் மீது அமர்ந்திருக்கும் சிறுவன் எவ்வித பயமும் இல்லாமல், முகத்தில் அலாதியான மகிழ்ச்சியோடு இந்த சவாரியை ரசித்துக்கொண்டே செல்கிறான்.
https://www.instagram.com/reel/DaOsYdzTE_O/?utm_source=ig_web_button_share_sheet
சாலையில் செல்லும் பாதசாரிகள் பலரும் இந்த வினோதமான காட்சியைக் கண்டு வியந்து, தங்களின் மொபைல் போன்களில் வீடியோ எடுக்கத் தொடங்கினர். இன்ஸ்டாகிராமில் கணக்கில் பகிரப்பட்ட இந்த வீடியோவை ஆயிரக்கணக்கான மக்கள் லைக் செய்துள்ளனர். “இனி குதிரை வண்டி காலம் முடிந்தது, இது நாய் வண்டிகளின் காலம்” என்று நெட்டிசன்கள் பலரும் இந்த வீடியோவிற்கு வேடிக்கையான கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், தலைமைச் செயல் அதிகாரிகள் அல்லது அரசு அதிகாரிகளின் வாட்ஸ்அப் சுயவிவரப் படம் மற்றும் பெயரைப் பயன்படுத்தி,…
மும்பை சாந்தீவலி பகுதியில் பெய்த கனமழையின் போது, திறந்திருந்த பாதாள சாக்கடை மேன்ஹோலில் தவறி விழுந்து அஸ்லாம் இசாக் ஷேக்…
தமிழக அரசியலில் தற்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது தமிழக வெற்றிக் கழக எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் நடத்தப்பட்ட ரூ.35 கோடி குதிரை…
தமிழக அரசியல் களம் எப்போதும் திமுக, அதிமுக என்ற இரு துருவங்களை மையமாகக்கொண்டே சுழன்று வந்துள்ளது. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்.,…
நாக்பூரைச் சேர்ந்த ராஜேந்திர தெம்ரே என்ற ஆட்டோ ஓட்டுநர், தமக்குத் தற்செயலாகக் கிடைத்த கூடுதல் பணத்தைக் கொண்டு செய்த நற்செயல்…
சளி, இருமல், செரிமானக் கோளாறு போன்ற அன்றாட உடல்நலப் பிரச்சினைகளுக்கு உடனடியாக மருந்துக்கடைகளுக்கும் மருத்துவமனைக்கும் ஓடுவதைத் தவிர்த்து, நம் வீட்டு…