“ஜன்னலில் தொங்கிய 3 வயது குழந்தை… மரணத்தின் விளிம்பிலிருந்து ஒற்றைக் கையில் மீட்ட இந்திய வாலிபர்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!”

Spread the love

கிழக்கு லண்டனின் இல்போர்ட் ஹை ரோட்டில் உள்ள ஒரு கடையின் மேல் மாடி ஜன்னல் விளிம்பில், 3 வயது சிறுமி ஒருவர் எதிர்பாராதவிதமாக தவறி விழும் நிலையில் ஆபத்தான முறையில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை கடையின் கீழே நின்று பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டனர். ஆபத்தை உணர்ந்த ஒரு பெண் உடனடியாக கீழ்ப்புற ஜன்னல் வழியாக மேலே ஏற முயன்றார். அதே நேரத்தில், அங்கு நின்றிருந்த ஒரு போலீஸ்காரரும், ஜெசில் என்ற இந்திய வாலிபரும் சிறுமிக்கு நேர் கீழே தயாராக நின்று கொண்டனர்.

அடுத்த சில நொடிகளில் அந்தச் சிறுமி ஜன்னலில் இருந்து கீழே விழுந்தபோது, கீழே அலர்ட்டாக நின்று கொண்டிருந்த ஜெசில் சாமர்த்தியமாக அவளைத் தன் கைகளில் தாங்கிப் பிடித்துக் காப்பாற்றினார். இந்த நெஞ்சை உலுக்கும் சம்பவத்தை நேரில் பார்த்து பதற்றத்தில் இருந்த பொதுமக்கள், சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டதைக் கண்டு ஆரவாரத்துடன் கைதட்டி தங்களது மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய ஜெசில், அங்குள்ள ஒரு உணவகத்தில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விபத்தில் இருந்து தப்பிய சிறுமியின் தந்தை, தனது மகளைக் காப்பாற்றிய ஜெசிலையும், அந்தப் போலீஸ்காரரையும் “அற்புதமான நாயகர்கள்” என்று நெகிழ்ச்சியோடு பாராட்டினார். இதற்கிடையே, தக்க சமயத்தில் செயல்பட்டு சிறுமியின் உயிரைக் காத்த இந்திய வாலிபரான ஜெசிலுக்கு சமூக வலைத்தளங்களிலும் பாராட்டுகள் குவிகின்றன.

Swetha

Recent Posts

“பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு…! SBI வங்கியில் 1,500 பணியிடங்கள்… விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே…!”

1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…

2 மணத்தியாலங்கள் ago

பேப்பர் பேனாவுக்கு ₹986 கோடி செலவிட்ட SBI… டிஜிட்டல் உலகிலும் தொடரும் ஸ்டேஷனரி செலவு…!!

பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…

2 மணத்தியாலங்கள் ago

போன்பே பயன்படுத்துபவரா நீங்கள்..? இனி ₹100 அபராதம்… புதிய அதிரடி உத்தரவு…!!

போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…

2 மணத்தியாலங்கள் ago

“டிகிரி முடிச்சவங்களுக்கு எஸ்பிஐ கொடுத்த ஜாக்பாட்.. 1,500 காலியிடங்கள்.. கடைசி தேதி எப்போது தெரியுமா?.. உடனே அப்ளை பண்ணுங்க”…!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…

2 மணத்தியாலங்கள் ago

“இப்படியும் கூட சம்பாதிக்கலாமா?.. ஒரு ரீல்ஸுக்கு ரூ.76 லட்சம்.. பார்ட்டிக்கு வர ரூ.25 லட்சம்.. ஓரியின் ‘மாஸ்’ பிசினஸ் மாடல்..!!

முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…

3 மணத்தியாலங்கள் ago

திமுகவில் இருந்து விலகும் செந்தில் பாலாஜி..? அதிமுக போட்ட ரகசிய ப்ளான்… அதிர்ச்சியில் ஸ்டாலின்…!”

திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…

3 மணத்தியாலங்கள் ago