இந்த வழக்கு சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு உண்மைச் சம்பவமாகும். 2013-ஆம் ஆண்டு மார்ச் 25 அன்று 25 வயதான ஃபெங் ஷியோ என்ற இளைஞன், இணையம் வழியாக அறிமுகமான 6-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியை விடுதிக்கு அழைத்துச் சென்று உடலுறவு கொண்டான். சிறுமி தன் வயதை 20 என்று கூறியிருந்ததாலும், அவளது உடல் வளர்ச்சி 20 வயதுப் பெண்ணைப் போல் இருந்ததாலும் அவள் சிறிய பெண் என்பதைத் தான் அறியவில்லை என அவன் வாதாடினான். உணவகக் கண்காணிப்பு கேமரா காட்சிகளிலும் இருவரும் விருப்பத்துடனே பழகியது பதிவாகியிருந்தது.
சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தபோது, வீட்டுப் பதிவேட்டின்படி சிறுமியின் பிறப்பு ஆண்டு 1999 என இருந்தது. இதன்படி சம்பவத்தின் போது சிறுமிக்கு 14 வயது பூர்த்தியாகவில்லை . ஆனால், பள்ளிச் சேர்க்கைப் பதிவேட்டில் அவளது பிறப்பு ஆண்டு 1998 என இருந்ததால், அவள் 14 வயதைக் கடந்தவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அரசு வழக்கறிஞர் அலுவலகம் முதலில் ஃபெங் ஷியோவை விடுவித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள்.
https://twitter.com/blackym25/status/2117226747859009574/video/1
அதன்பின்னர், காவல்துறையினர் சிறுமியைப் பெற்றெடுத்த மருத்துவச் செவிலியர், அண்டை வீட்டார் மற்றும் கிராம அதிகாரிகளிடம் தீவிர விசாரணை நடத்தி, அவளது உண்மையான பிறப்பு ஆண்டு 1999 தான் என்பதை உறுதிப்படுத்தினர். சீனச் சட்டத்தின்படி, 14 வயதுக்கு உட்பட்ட சிறுமியுடன் அவளது சம்மதத்தோடு உடலுறவு கொண்டாலும் அது சட்டப்படி பாலியல் வன்கொடுமையாகும் சிறுமியின் வயது 14-க்கு குறைவு என்பது உறுதியானதால், ஃபெங் ஷியோ மீண்டும் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
தமிழக வெற்றிக் கழகத்தின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வெறும் ஆறு மாத காலத்திற்குள் வாபஸ் பெறுவது ஆரோக்கியமான ஜனநாயக…
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் வேளையில், தமிழக அரசு பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்குத் தொடர்ந்து நற்செய்திகளை வெளியிட்டு வருகிறது. ஏற்கெனவே போக்குவரத்துத்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில், நள்ளிரவில் திருமணமான தனது காதலியை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்த 28 வயது இளைஞரைக் காதலியின்…
பீகார் மாநிலத்தில், கள்ளக்காதல் சந்தேகத்தால் கணவன் தனது மனைவியை 20 நிமிடங்களில் 170க்கும் மேற்பட்ட முறை கத்தரிக்கோலால் குத்திக் கொடூரமாகக்…
சமூக வலைதளங்களில் தற்போது ஒரு கால்பந்து ரசிகரின் வித்தியாசமான மற்றும் நகைச்சுவையான காணொளி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த…
தெலுங்கானா மாநிலத்தில், சட்டப்பூர்வமாகத் தத்தெடுக்கப்படவில்லை எனக் கூறி 3 ஆண்டுகளாக ஆசையாக வளர்த்த தம்பதியிடமிருந்து பிஞ்சுக் குழந்தையைப் பிரித்துக் காப்பகத்தில்…