உத்தரப் பிரதேச மாநிலத்தில், நள்ளிரவில் திருமணமான தனது காதலியை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்த 28 வயது இளைஞரைக் காதலியின் கணவன் மற்றும் குடும்பத்தினர் கொடூரமாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் சாத் பகுதிக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த அதுல் திவாரி (28) என்ற இளைஞர், சனிக்கிழமை நள்ளிரவில் திருமணமான தனது காதலியை அவரது வீட்டிற்கு நேரில் சென்று சந்தித்துள்ளார். அப்போது அங்கிருந்த பெண்ணின் கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதுல் திவாரியைக் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.
ஆத்திரமடைந்த அவர்கள், அதுல் திவாரியைத் தடிகளால் சரமாரியாகத் தாக்கி வீட்டிற்குள் உள்ள ஒரு அறையில் பூட்டி வைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த இளைஞரின் உடலைப் பரிசோதித்தபோது அவரது உடலில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் பலத்த காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்துள்ள கான்பூர் காவல்துறையினர், அந்தப் பெண் மற்றும் அவரது மாமியாரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்திற்குட்பட்ட சாபோலி பகுதியில், கிராமங்களை இணைக்கும் குறுகிய சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.…
உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா பகுதியில் உள்ள கோவிலில் பூசாரியாகப் பணியாற்றி வந்த ஷியாம் பீகாரி என்பவர், கோவிலுக்கு வரும்…
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, ரூ.634…
தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் பிரபல நகைச்சுவை, குணச்சித்திர நடிகரான ஜூனியர் பாலையா அவர்கள், தனது 70வது வயதில் உடல்நலக்குறைவு…
தமிழக அரசியலில் தவெக ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், எதிர்வரும் இடைத்தேர்தல்களை மையமாக வைத்து அரசியல் களத்தில் பல்வேறு…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகேயுள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹேமலதா மாயமாகி 23 நாட்களாகும் நிலையில்,…