Connect with us

CINEMA

‘கர்மா- னா என்னென்னு தெரியுமா உனக்கு?’… ‘ஜப்பான்’ திரைப்படத்தின் டப்பிங் பணிகளை தொடங்கிய நடிகர் கார்த்தி… வீடியோ படுவைரல்…

நடிகர் கார்த்தி தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு இளம் நடிகர். மக்களுக்கு சாதாரணமாக காதல், நடனம், காமெடி படங்கள் என கொடுக்காமல் தனது கதை தேர்வில் வித்தியாசம் காட்டி மக்களுக்கும் ஒருபுதுவித அனுபவத்தை கொடுத்து வருகிறார். பருத்திவீரனில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன், தீரன், கைதி என சூப்பர் டூப்பர் ஹிட படங்களை கொடுத்துள்ளார்.

   

இவர் நடிப்பில் மட்டும் இந்த வருடம் மூன்று படங்கள் வெளியாகியுள்ளது. அவை பொன்னியின் செல்வன், விருமன் மற்றும் சர்தார் இந்த மூன்று படங்களுமே வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. வசூலில் சாதனையும் படைத்துள்ளது. தற்பொழுது நடிகர் கார்த்திக் ‘ஜப்பான்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார். இப்படத்தினை போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராஜு முருகன் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நடிகை அனு இமானுவேல் நடிகர் கார்த்திக் ஜோடி ஆக நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருக்கிறது. ‘ஜப்பான்’ திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25வது படம் என்பதால் மிக அதிக பொருட் செலவில் படம் தயாராகி வருகிறது.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ஜப்பான் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் நடிகர் கார்த்தி டப்பிங் பணிகளை தொடங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top