சக்திவேல் சீரியலில் நடித்து வரும் நடிகை சந்தியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் வரவேற்பு இருக்கும். அந்த சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கும்.
சின்னத்திரையில் இருந்து பல நடிகர் நடிகைகள் வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் சக்திவேல். இந்த சீரியலில் லீட் ரோல்லில் வேலுவாக நடிகர் பிரவீன் ஆதித்யா நடித்து வருகின்றார். அதேபோல் சக்தியாக அஞ்சலி, மீனாவாக ரேஷ்மா, அன்னி கதாபாத்திரத்தில் அவள் சந்தியா என பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
அன்னி கதாபாத்திரத்தில் நடித்துவரும் சந்தியாவை நாம் பல சீரியல்களில் பார்த்திருப்போம். இவரை சவுண்டு சந்தியா என்று பலரும் கூறுவார்கள். வெறும் நடிகையாக மட்டுமில்லாமல் பட்டிமன்ற பேச்சாளர், ஸ்டாண்ட்-அப் காமெடி, விஜே ஆங்கர் என பன்முகத்தன்மை கொண்டவர். 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பொண்ணுக்கு தங்க மனசு சீரியல் மூலமாக தனது திரை பயணத்தை தொடங்கினார்.
அதைத் தொடர்ந்து சக்திவேல் நளதமையந்தி உள்ளிட்ட தொடர்களிலும் இவர் நடித்திருக்கின்றார். இவருக்கு சமீபத்தில் முரளி என்பவர் உடன் நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கின்றார். இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்த புகைப்படங்கள் இதோ..
View this post on Instagram