வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். மேலும் பிரபு, பிரசாந்த், சினேகா, லைலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மாபெரும் பொருட்செலவில் கோட் படம் உருவாகிறது. இதனை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தினர் படத்தின் ஓடிடி உரிமையை 150 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டமிட்டனர்.
அந்த சமயம் அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் கோட் படத்தை 140 கோடிக்கு வாங்க முன் வந்தது. ஆனால் தயாரிப்பு நிறுவனம் ஒத்துப் போகவில்லை. இதனால் அமேசான் ஓடிடி நிறுவனத்தினர் பின் வாங்கி விட்டனர். அதன் பிறகு பல ஓடிடி தலங்களில் கோட் படத்தை விற்பனை செய்ய தயாரிப்பு நிறுவனம் முயற்சி செய்தது.
ஆனால் எந்த ஓடிடி தளமும் 150 கோடி ரூபாய் கொடுத்து கோட் படத்தை வாங்க முன்வரவில்லை. கடைசியாக netflix நிறுவனத்திடம் 110 கோடி ரூபாய்க்கு நிறுவனம் கோட் படத்தின் ஓடிடி உரிமையை விற்பனை செய்துள்ளது. மேற்கூறிய தகவலை பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.