Connect with us

ரொம்ப மிஸ் பண்றேன்..! அவர மாதிரி இன்னொருத்தரை பார்க்கவே முடியாது.. விஜயகாந்த்-தின் பத்மபூஷன் விருது குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ..!

CINEMA

ரொம்ப மிஸ் பண்றேன்..! அவர மாதிரி இன்னொருத்தரை பார்க்கவே முடியாது.. விஜயகாந்த்-தின் பத்மபூஷன் விருது குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ..!

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மத்திய அரசு சார்பாக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழக மக்களால் கேப்டன் என்ற பட்டப் பெயருடன் அழைக்கப்பட்டு வந்த விஜயகாந்தின் இறப்பு என்பது ஒட்டுமொத்த தமிழகத்தையும் புரட்டி போட்டது . விஜயகாந்தின் மறைவு அவரின் குடும்பத்தார் மட்டுமல்லாமல் தமிழக மக்களை அதிக அளவில் பாதித்தது.

இதனை நம் வீடியோ மூலமாக பார்த்திருப்போம். அது மட்டும் இல்லாமல் பல அரசியல் பிரபலங்களும் திரை பிரபலங்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி சென்றார்கள். விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் இருக்கும் விஜயகாந்த் மண்டபத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் விஜயகாந்த் உடைய பணியை பாராட்டி பத்மபூஷன் விருது வழங்குவதாக சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு சார்பாக அறிவிக்கப்பட்டது.

   

சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. இதனை விஜயகாந்த் அவர்களின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடமிருந்து பெற்றுக் கொண்டார். விஜயகாந்த் அவர்களுக்கு பத்மபூஷன் விருது வழங்கியதற்கு ரசிகர்களும், அரசியல் பிரபலங்களும் திரை பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்திருந்தனர் .

 

மேலும் பத்மபூஷன் விருதை விஜயகாந்த் நினைவிடத்தில் வைத்து பிரேமலதா அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விஜயகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை பாராட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது “என்னுடைய அருமை நண்பர் விஜயகாந்த். அவர்களுக்கு பத்மபூஷன் விருது கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

 

View this post on Instagram

 

A post shared by NewsTamil 24×7 (@newstamiltv24x7)

நாட்டின் பத்மபூஷன் விருதுகள் 2024 ஆம் புத்தகத்தில் அவருடைய வரலாற்றை பதிவிட்டு இருக்கிறார்கள். இது அவருடைய பெயருக்கு இன்னும் பெருமை சேர்த்துள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை, என்பதை இப்போதும் என்னால் நம்ப முடியவில்லை. திடீரென்று தோன்றி பல சாதனைகள் செய்து மறைந்துவிட்டார். இனிமேல் விஜயகாந்த் போல் ஒருவரை பார்க்க முடியாது. அவரை நான் ரொம்ப மிஸ் பண்ணுகிறேன். மதுரையில் பிறந்த ஒரு மதுரை வீரன் நம் கேப்டன் விஜயகாந்த், அவர்கள் நாமும் வாழ்க” என்று கூறியிருந்தார்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top