Connect with us

CINEMA

Paris-ல் 2023 உலக கிரிக்கெட் கோப்பையை அறிமுகம் செய்த மீனா.. முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றார்..

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கதாநாயகியாக மாறியவர் நடிகை மீனா.  ரஜினி, அஜித், விஜய் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து தமிழின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை மீனா. இவர் நடிப்பின் உச்சத்தில் இருக்கும் பொழுதே வித்யாசாகர் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நைனிகா என்ற மகளும் உள்ளார்.

   

கொரோனா காலகட்டத்தில் அவரது கணவர் வித்தியாசாகர் நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். தனது கணவரின் உயிரிழப்பால் மிகப்பெரும் துயரத்தை அடைந்தார் நடிகை மீனா. தற்பொழுது தான் இவர் மெல்ல மெல்ல தனது கணவரின் மரணத்திலிருந்து மீண்டு வந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து நடிகை மீனா தற்பொழுது சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

தற்பொழுது நடிகை மீனாவை மீண்டும் ஹீரோயினாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தற்பொழுது நடிகை மீனா பரிசிற்கு 2023 இந்திய உலக கோப்பையை அறிமுகம் செய்து வைக்க சென்றுள்ளார். இது குறித்த புகைப்படத்தை  அவர் தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டு, ’உலக கோப்பையை அறிமுகம் செய்யும் முதல் இந்திய நடிகை என்ற பெருமையை பெற்று உள்ளேன். என்று மிகவும் பெருமையாக  தெரிவித்துள்ளார். ரசிகர்களும், திரைபிரபலங்களும் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Meena Sagar (@meenasagar16)

 

author avatar
Continue Reading

More in CINEMA

To Top