பிக்பாஸ் சீசன் 6 இந்த வாரம் எலிமினேஷன்…. முக்கிய பிரபலத்தை வீட்டை விட்டு வெளியேற்றிய கமல்…. இனி பிரச்சனையே இருக்காது…

By Archana

Published on:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக் பாஸ்.இதில் இதுவரை ஐந்து சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு இருக்கிறது. இதில் முதலில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கடந்த வாரம் ஜி பி முத்து மற்றும் நடன இயக்குனர் சாந்தி பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் தற்போது 19 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

   

நாள்தோறும் பரபரப்பு மற்றும் சர்ச்சைகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாமல் பிக் பாஸ் ஒளிபரப்பாகி வருகின்றது.டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு மணி நேரம் எபிசோடு மட்டுமல்லாமல் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் இந்த ஷோ ஒளிபரப்பு செய்யப்படுவதால் ரசிகர்கள் போட்டியாளர்கள் பற்றி பல விஷயங்களையும் தெரிந்து கொள்கின்றனர்.

இதனிடையே இந்த வாரம் யார் வெளியேறப் போவது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவ்வகையில் தற்போது மக்கள் வாக்குகள் அடிப்படையில் அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அவர் பிக் பாஸ் வீட்டில் நிவாஸினி மற்றும் குயின்சி உள்ளிட்ட பல பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்ளும் காட்சிகள் வெளியாகி பலரையும் முகம் சுளிக்க வைத்தது.

இதனால் அவர் குறித்து பல விமர்சனங்களும் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் தற்போது அசல் கோளாறு பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தான் ஏற்படுத்தி உள்ளது.

author avatar
Archana