Connect with us

CINEMA

ரஜினி , முரளி மிஸ் செய்த வாய்ப்பை பயன்படுத்தி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த கேப்டன்… பெரிய அடையாளமாக அமைந்த அந்த படம் எது தெரியுமா..?

1986ல் இயக்குனர் ஆர்.சுந்தரராஜன் இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் வெளியான படம் அம்மன் கோவில் கிழக்காலே. இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.  விஜயகாந்துடன் இணைந்து ராதா, செந்தில், ரவிச்சந்திரன், ஸ்ரீவித்யா, ராதாரவி, வினுச்சக்கரவர்த்தி உள்பட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்டானது.

   

குறிப்பாக சின்னமணிக்குயிலே, கட வீதி, காலை நேர, ஒரு மூணு முடிச்சாலே, பூவ எடுத்து போன்ற பாடல்கள் இன்றும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில்  உள்ளது. தமிழகத்தின் பல்வேறு திரையரங்குகளில், 150 நாட்களைக் கடந்தும், 20 திரையரங்குகளில் 200 நாட்களைக் கடந்தும், படம் வெற்றிகரமாக ஓடியது.

விஜயகாந்தை கடைகோடி கிராமங்கள் வரை கொண்டு சேர்த்ததில் ‘அம்மன் கோவில் கிழக்காலே’ படத்திற்கு முக்கிய பங்குண்டு. முதன்முதலில் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரை வைத்து படத்தை இயக்க முடிவு செய்தாராம் இயக்குனர். ஆனால் அவரின் கால்ஷீட் கிடைக்கவில்லையாம். இதைத்தொடர்ந்து இந்த படத்தில் முரளி, ரேவதியை நடிக்க வைப்பதென முடிவு செய்து முரளிக்கு அட்வான்ஸும் கொடுத்தார் சுந்தர்ராஜன்.

கன்னடப் படத்தை முரளி முடிக்க வேண்டியிருந்ததால் அவரால் உடனடியாக கால்ஷீட் தர முடியவில்லை. அதனால், முரளிக்குப் பதில் விஜயகாந்த், ராதாவை வைத்து படத்தை எடுத்துள்ளார்.  இந்த படத்தில் விஜயகாந்த் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. கேப்டனின் திரைவாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்தது.

Continue Reading

More in CINEMA

To Top