Connect with us
rajan p dev

CINEMA

மறக்க முடியுமா இவரை… வில்லனிசத்தில் காமெடிக் கலந்து கலக்கிய ராஜன் பி தேவ்!

தமிழ் சினிமாவில் 50க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக நடித்து மிரளவைத்தவர் நடிகர் ராஜன் பி தேவ். சூரியன் படத்தில் ரோஜாவின் தந்தையாக வெள்ளந்தி மனிதர் போல தோன்றிக்கொண்டே தீவிரவாதிகளோடு சேர்ந்து கொலைத்திட்டம் வில்லனாக மிரட்டியிருப்பார். அந்த படத்தில் இணை இயக்குனராக பணியாற்றிய ஷங்கர் தன்னுடைய முதல் படத்தில் அவரையே பிரதான வில்லன் நடிகராக்கினார்.

அந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டானதை அடுத்து தமிழில் அவருக்கு எக்கச்சக்கமான வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அவர் நடித்ததில் முக்கியமான படங்களாக பார்த்திபனோடு வாய்மையே வெல்லும், விஜய்யோடு லவ் டுடே, அஜித்தோடு ரெட் , சுந்தர் சி இயக்கிய ‘பெரிய இடத்து மாப்பிள்ளை’ ஆகிய படங்களை சொல்லலாம்.

   

கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட ராஜன் பி தேவ், மேடை நாடகங்களில் பிரபலமான நடிகராக இருந்தவர். அவரை இயக்குனர் பாசில் ’ எண்டே மம்முட்டிக் குட்டியம்மாக்கு’ என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா நடிகராக்கினர். ஆலப்புழா மாவட்டத்தில் சேர்த்தலா என்ற இடத்தில் பிறந்தார் இந்த ஆகச் சிறந்த கலைஞர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனத் தென்னிந்திய மொழிகளில் 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தொடர்ந்து சிறப்பான வேடங்களில் நடித்து வந்தாலும் அவருக்கு ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்துள்ளன. மலையாள சினிமாவில் மட்டும் கவனம் செலுத்தி வந்த அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி உயிரிழந்தார். நீண்ட நாட்கள் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டு வந்துள்ளார்.

மேடை நாடக உலகிலிருந்து வந்து சினிமாவில் பிரபலம் அடைந்தாலும் தான் வளர்ந்த மேடை நாடக உலகை மறக்காதவர். எப்போதும் வறிய மேடை நாடகக் கலைஞர்களுக்கு தன்னால் ஆன உதவியை செய்துகொடுத்துள்ளார். இவரின் மறைவு தமிழ் மற்றும் மலையாள சினிமா உலகுக்கு பேரிழப்பாக அமைந்தது.

Continue Reading

More in CINEMA

To Top