Connect with us

CINEMA

மணிரத்னம் படத்திற்கு இளையராஜா இசையமைக்காதது ஏன்?….. இவங்க பிரிந்ததற்கு பின்னாடி இம்புட்டு விஷயம் இருக்கா?…!!!

தமிழ் சினிமாவில் இயக்குனராக மணிரத்தினம் என்றால், இசையமைப்பாளராக இளையராஜா என்று அவரவர் துறைகளில் பெரிய ஜாம்பவான்களாக இருப்பவர் தான் மணிரத்னம் மற்றும் இளையராஜா. சினிமாவில் எட்ட முடியாத வளர்ச்சியை அடைந்துள்ளார்கள். இவர்கள் இருவரும் சினிமாவில் ஏகப்பட்ட திரைப்படங்களில் ஒன்றாக இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள்.

   

முதன்முதலாக மணிரத்தினமும் இளையராஜாவும் சேர்ந்து பணிபுரிந்த திரைப்படம் ஒரு கன்னட படம் மணிரத்தினம். அப்போது முன்னணி இயக்குனராக வரவேண்டும் என்பதற்காக போராடிக் கொண்டிருந்தவர். ஆனால் இளையராஜா அப்போதே மிகப்பெரிய இசையமைப்பாளராக இருந்தார். ‘பல்லவி அணு பல்லவி’ என்ற திரைப்படத்தில் தான் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினார்கள்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, அஞ்சலி உள்ளிட்ட பல திரைப்படங்களில் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார்கள். மணிரத்தினத்துக்கும் இளையராஜாவுக்கும் இடையே நாயகன் திரைப்படத்தின் பின்னணி இசையின் போது சிறிய கருத்து வேறுபாடு தொடங்கியது. ஆனால் அவர்கள் பிரிந்ததற்கு அதுவே காரணம் என்று கூற முடியாது.

நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கே பாலச்சந்தர்ருக்காக ரோஜா திரைப்படத்தை இயக்கினார் மணிரத்தினம். அந்த காலகட்டத்தில் கே.பாலச்சந்தர் அவருக்கும் இளையராஜாவுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. அதன் காரணமாக மணிரத்தினம் ஏ ஆர் ரகுமானை அந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து பல படங்களில் இவர்களின் கூட்டணி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளது. இப்படி பிரிந்தவர்கள் தான் அதன் பிறகு ஒன்றிணையவே இல்லை என்று கூறியிருக்கிறார் சித்ரா லட்சுமணன்.

author avatar
Mahalakshmi
Continue Reading

More in CINEMA

To Top