Connect with us

CINEMA

இதுதான் சார் கடவுள்… 13 மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் ஒளி ஏற்ற நடிகர் ராகவா லாரன்ஸ் செய்த மிகப்பெரிய உதவி… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டான்ஸ் மாஸ்டர், சமூக ஆர்வலர் என பன்முகங்களுடன் வலம் வருபவர் ராகவா லாரன்ஸ்.  ‘உன்னை கொடு என்னை தருவேன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகர் ராகவா லாரன்ஸ்.  நடிகராக மட்டுமின்றி இவர் இயக்கிய திரைப்படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவரது உதவும் குணம் பற்றி நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த அளவிற்கு சமூக நல பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

   

இவர் நடத்தி வரும் அறக்கட்டளை மூலம் பல மாற்றத்திறனாளிகளுக்கு பல வகைகளில் உதவி வருகிறார். அது மட்டும் இல்லாமல் தன் வீட்டிலேயே பல மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் அனாதை குழந்தைகளையும் தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இதனால் ரசிகர்களுக்கு பிடித்த ஒருவராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இவர் நடிப்பில் தற்போது பென்ஸ் மற்றும் ஹண்டர் என இரண்டு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

சமீபத்தில் இவர் தமிழர் பாரம்பரிய கலைகளில் ஒன்றான மல்லர் கம்ப கலையில் கலக்கிய மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, அவர்களுக்கு பைக் வாங்கி கொடுப்பதாகவும் வீடு கட்டித் தருவதாகவும் உறுதியளித்தார்.  இந்த நிலையில், தான் சொன்னபடியே தற்போது முதற்கட்டமாக மல்லர் கம்ப கலையில் கலக்கிய 13 மாற்றுத்திறனாளிகளுக்கு புது ஸ்கூட்டியை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

தற்போது பைக் வாங்கிக் கொடுத்துள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக வீடும் கட்டி தருவேன் என ராகவா லாரன்ஸ் உறுதிபட கூறியுள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அவரின் நல்ல மனதை மக்களும் மனதார பாராட்டி வருகின்றனர். இதோ அந்த வீடியோ….

 

View this post on Instagram

 

A post shared by Ragava Lawrence (@actorlawrence)

Continue Reading

More in CINEMA

To Top