Connect with us

INSPIRATION

மாதம் 10 லட்ச ரூபாய் வருமானம்.. கோவிட் லாக்டவுனில் கோடிக்கணக்கில் அள்ளிய வாலிபர்…

கோவிட் லாக்டவுன் சமயத்தில் பலருக்கும் வேலை போனது. அது போன்ற துக்ககரமான நாட்களை மீண்டும் எண்ணிப்பார்க்க யாருக்கும் மனம் வராது. ஆனால் கெட்டதிலும் சிலருக்கு நல்லது நடக்கத்தான் செய்கிறது.

6 வருடங்களுக்கு முன்பு டுங்கில் என்ற பெயரில் கிளவுட் கிட்சன் ஒன்றை தொடங்கியவர்தான் கார்த்திகேயன். கிளவுட் கிட்சனுக்கு சர்விஸ் செய்ய ஆட்கள் தேவையில்லை, உட்கார்ந்து சாப்பிட டேபிள் தேவையில்லை, ஏசி அறை தேவையில்லை. ஒரு கிட்சன் இருந்தாலே போதும். ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிடும் வழக்கம் தற்போது பெருகிப்போன நிலையில் கிளவுட் கிட்சனை தொடங்கி அதிகளவில் லாபம் ஈட்டியுள்ளார் கார்த்திகேயன்.

   

கிளவுட் கிட்சன் தொடங்குவதற்கு கிட்சனும் ஒரு கம்ப்யூட்டரும் இருந்தால் போதும். ஆன்லைன் ஆர்டரின் பேரில் உணவு ஆர்டர் செய்பவர்களுக்கு டெலிவரி செய்ய ஆட்கள் தேவை. அதே போல் ஆர்டர் செய்வதற்கு ஏற்ப கிட்சனில் சமைப்பதற்கு ஆட்கள் தேவை. வெறும் 5 லட்ச முதலீட்டில் கிளவுட் கிட்சனை தொடங்கிய கார்த்திகேயன் தற்போது 7 கோடி வருமானம் பார்க்கிறார்.

கோவிட் காலத்தில் இவரது பிசினஸ் சூடுபிடித்திருக்கிறது. ஹோட்டல்கள் எதுவும் இயங்க முடியாத அந்த சமயத்தில் டாக்டர்கள், நர்சுகள், கோவிட் காலத்தில் வேறு வழியே இல்லாமல் வேலைக்குச் சென்றவர்கள் என பலரும் டுங்கில் கிளவுட் கிட்சனை நாட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதில் இருந்து அவரது பிசினஸ் சூடுபிடிக்கத் தொடங்கியது.

டுங்கில் கிளவுட் கிட்சனில் பல கிளைகளை திறந்த கார்த்திகேயன் அமெரிக்காவின் சியாட்டல் நகரில் ஒரு புதிய கிளையைத் தொடங்கவுள்ளார். சிறிய முதலீட்டில் பெரிய லாபம் பார்க்க முயற்சிப்பவர்களுக்கு கார்த்திகேயன் ஒரு இன்ஸ்பியராக திகழ்கிறார்.

author avatar
Continue Reading

More in INSPIRATION

To Top