Connect with us

CINEMA

சின்ன கல்லு பெத்த லாபம் பார்முலாவில் கலக்கிய TP கஜேந்திரன்… இதெல்லாம் அவர் இயக்கிய படங்களா?

தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றியுள்ள டி பி கஜேந்திரன் அதிகம் கவனிக்கப்படாத இயக்குனர்களில் ஒருவராவார். சிறிய பட்ஜெட், இரண்டாம் கட்ட நடிகர்கள், குடும்ப செண்ட்டிமெண்ட் நிறைந்த நகைச்சுவை காட்சிகள் என பார்முலாவில் பயணித்த டி பி கஜேந்திரன் பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

பழம்பெரும் நடிகை டி பி முத்துலட்சுமியின் உறவினரான கஜேந்திரன் கே பாலச்சந்தர் மற்றும் விசு ஆகியோர்களின் பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். அந்த அனுபவத்தின் மூலமாக ’வீடு மனைவி மக்கள்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தில் விசு மற்றும் கே ஆர் விஜயா முக்கிய கேரக்டர்களிலும் பாண்டியன், சீதா நாயகன், நாயகிகளாகவும் நடித்தனர். இந்த படம் வசூல் அளவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் அதன் பிறகு அவர் பல படங்களை இயக்கினார்.

   

எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டு தங்கம், எங்க ஊரு மாப்பிள்ளை, நல்ல காலம் பொறந்தாச்சு, பாட்டு வாத்தியார், பாசமுள்ள பாண்டியரே உள்ளிட்ட படங்களை இயக்கினார். அதன் பிறகு நகைச்சுவைப் படங்களின் பக்கம் ரூட்டை மாற்றிய கஜேந்திரன் பிரபு நடித்த பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடைசியாக இவர் இயக்கியது சீனா தானா மற்றும் மகனே என் மருமகனே திரைப்படங்கள்.

இயக்குனராக மட்டுமில்லாமல் 100க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார் டி பி கஜேந்திரன். முதல்வர் மு க ஸ்டாலினின் கல்லூரி தோழரான கஜேந்திரன் கடந்த 2023 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.

அவருக்குப் பிறகு சிறிய பட்ஜெட்டில் நல்ல கதையம்சம் உள்ள படங்களை எடுக்கும் இயக்குனர்கள் தமிழ் சினிமாவில் சுத்தமாக இல்லாமலேயே போய்விட்டார்கள் என்பது கவலைக்குரிய ஒன்றாகும்.

Continue Reading

More in CINEMA

To Top