Connect with us

CINEMA

வெறும் 15 நாட்களில் உருவான சூப்பர் ஹிட் படம் அது.. ரகசியத்தை உடைத்த இயக்குனர் சேரன்..

பிரபல இயக்குனரான சேரன் இயக்கத்தில் கடந்த 2000-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் வெற்றி கொடி கட்டு. இந்த திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றி பெற்றது. இதில் முரளி, பார்த்திபன் ஆகியோர் கதாநாயகனாக நடித்திருந்தனர். மேலும் மீனா, மாளவிகா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். சொந்த மண்ணை விட்டு வேலைக்காக துபாய்க்கு செல்லும் மக்களின் கஷ்டங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது தான் வெற்றி கொடி கட்டு படம்.

   

இந்த படத்தின் இயக்குனர் சேரன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, நான் சிங்கிள் ஹீரோவை வைத்து தான் படம் எடுத்திருக்கிறேன். முதல் முறையாக இரண்டு ஹீரோக்களை வைத்து படம் எடுத்தேன். நான் அப்படி யோசிச்சு பார்த்ததே இல்லை. வெற்றிக்கொடி கட்டு படத்தின் திரைக்கதை எழுதுவதற்கு எனக்கு 15 நாட்கள் தான் ஆனது. என்னிடம் இந்த மாதிரி கதை எழுத வேண்டும் என சொன்னபோது யாரும் என்னை தொந்தரவு செய்யாத இடம் வேண்டும் எனக் கூறினேன்.

அதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்து தந்தார்கள். மூன்று வேலையும் எனக்கு சாப்பாடு வந்துவிடும். நான் மட்டும்தான் ஒரு வீட்டில் இருந்து யோசித்து 15 நாட்களில் வெற்றி கொடி கட்டு படத்தின் திரைக்கதையை எழுதினேன். அந்த படம் தான் வெற்றி படமானது. துபாய்க்கு வேலைக்காக செல்லும் மக்கள் அவதிப்படுவதை படத்தில் எடுத்து கூறி இருக்கிறேன். அதற்கு என் சொந்த ஊரு தான் காரணம்.

எங்கள் ஊரில் இப்படித்தான் துபாய்க்கு செல்லும் ஏராளமான மக்களை பார்த்து இருக்கிறேன். மேலும் துபாய்க்கு செல்பவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை நகைச்சுவையாக காட்டும் பொருட்டு வடிவேலுவையும் நடிக்க வைத்தேன். வடிவேலு இந்த படத்தில் நடிக்க பார்த்திபன் தான் காரணம். அவர்தான் வடிவேலுவிடம் சென்று பேசினார் என வெற்றி கொடி கட்டு படத்தின் அனுபவங்களை பகிர்ந்துள்ளார் சேரன். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

author avatar
Priya Ram
Continue Reading

More in CINEMA

To Top