Connect with us

CINEMA

விவாகரத்தான முதல் திருமணம்.. திருமணம் ஆகாமலே வேறொருவருடன் காதல்.. நடிகர் குணாலின் தற்கொலையில் இருக்கும் பின்னணி..

தமிழ் சினிமாவில் பெரும் புகழை சம்பாதித்த பல நடிகர், நடிகைகளின் தற்கொலை, மரணம் என்பது ஒரு மர்மமாகவே நீடிக்கும். சில்க் ஸ்மிதா தொடங்கி சுஷாந்த் வரை பலரது மரணமும் பெரும் அதிர்ச்சியும், மர்மமும் நிறைந்ததாகவே இருக்கிறது. இந்த வரிசையில் இடம் பெற்ற நடிகர்களில் ஒருவர் குணால். 2000-ம் ஆண்டு காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணனாக ஹேண்ட்சம் சாக்லேட் பாயாக திரையில் வலம் வந்தவர் நடிகர் குணால். மும்பையைச் சேர்ந்த இவர், காதலர் தினம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பின் நடிகை சிம்ரனின் தங்கையும், நடிகையுமான மோனலுடன் இணைந்து பார்வை ஒன்றே போதுமே, பேசாத கண்ணும் பேசுமே, நண்பனின் காதலி, வருஷமெல்லாம் வசந்தம், புன்னகை தேசம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.

#image_title

   

இறுதியாக அவர் நடித்தப் படம் நண்பனின் காதலி. இவருக்கும் நடிகை மோனலும் காதலில் இருப்பதாக பல கிசுகிசுக்கள் சினிமாவில் உலா வந்தன. பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டவருக்கு இரு பெண் பிள்ளைகளும் உள்ளனர். 2008-ம் ஆண்உ பிப்ரவரி 7-ம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக மும்பையில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டார். இந்த செய்தி தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவரது தற்கொலைக்கு பல காரணங்கள் கூறப்பட்டது. பெரும்பாலும், அவரது படங்கள் பெருமளவில் ஹிட் ஆகவில்லை என்ற விரக்தியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

#image_title

இந்த நிலையில், அவரது இறப்பிற்கு உண்மையான காரணத்தை சினிமா விமர்சகர் செல்வராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். குணால் தற்கொலை வழக்கை அவரது தந்தை சிபிஐ வரை எடுத்துச் சென்றாராம். அந்த விசாரணையில் அவருடன் ஹீரோயினாக நடிக்க இருந்த ஒரு நடிகையுடன் அவர் நெருக்கமாக இருந்தது தெரியவந்துள்ளது. தமிழில் எதிர்பார்த்த அளவு ஹிட்டை பெறமுடியாத குணால், பாலிவுட் பக்கம் சென்று நண்பருடன் சேர்ந்து ஒரு ப்ரொடக்‌ஷன் நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் எடுக்கப்படும் படத்தில் ஹீரோவாக நடிக்க தயாராகியுள்ளார்.

#image_title

அந்தப் படத்தில் அவருக்கு ஹீரோயினாக லவீனா பங்கஞ் பாட்டியா என்ற மாடல் ஒப்பந்தமாகியுள்ளார். தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என்பதால், நடிகையுடன் நட்பாக பழகத் தொடங்கிய நிலையில், பின்பு இருவருகும் இடையே நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து குணாலின் மனைவி அனுராதாவுக்கு தெரியவர, கண்டிக்கிறார். இதனையெல்லாம் கண்டுகொள்ளாத குணால் தொடர்ந்து லவீனாவுடன் சுற்றி வந்துள்ளர். பிப்ரவரி 7-ம் தேதி 2008-ம் ஆண்டு லவீனாவின் வீட்டில் இவர்களுக்குள் சிறிய வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்ட நிலையில், லவீனா கழிவறைக்குள் சென்று பூட்டிக் கொள்ள, சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தப் போது குணால் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

#image_title

தகவலறிந்து வந்த போலீசார் குணாலின் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர். அவரது உடலில் பல காயங்கள் இருந்ததால், குணாலின் தந்தை புகார் கொடுக்க, விசாரணை தீவிரமாகியது. சிபிஐ வரை சென்ற இந்த வழக்கில், லவீனா கைது செய்யப்பட்டு, அவர் மீது குற்றம் இல்லை என நிரூபனமான பிறகு 2010-ல் விடுதலையும் செய்யப்பட்டார். ஆக குணாலின் மறைவுக்கு காரணம், மோனல் இறப்போ, அல்லது படங்கள் ஹிட்டாவதோ இல்லை என்பது இதன் மூலம் நிரூபனமாகியுள்ளது.

author avatar
Archana
Continue Reading

More in CINEMA

To Top