Connect with us

CINEMA

“அப்பா-னா நான் ரொம்ப எமோஷனல் ஆயிடுவேன்”… நினைவேந்தல் நிகழ்ச்சியில் தேம்பி தேம்பி அழுத கேப்டன் மகன் … கலங்கி போன திரைபிரபலங்கள்… 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும்,  தேமுதிகவின் தலைசிறந்த தலைவராகவும் செயல்பட்டு மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து நம்மை விட்டு  கடந்த வருடம் டிசம்பர் 28ஆம் தேதி பிரிந்தவர் தான் கேப்டன் விஜயகாந்த். உடல் நலக்குறைவால் இவ்வுலகை விட்டு பிரிந்த, அவரது உடலை அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அடக்கம் செய்தனர்.

   

இந்நிலையில் நேற்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில் விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சங்க தலைவர் நாசர், செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் மற்றும் பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் கலந்து கொண்டனர். இவர்கள் கேப்டன்  விஜயகாந்தின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒவ்வொருவரும் நடிகர் விஜயகாந்த் குறித்த தங்களது நினைவுகளை அனைவர் முன்னிலையிலும் மேடையில் பகிர்ந்து கண்கலங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மகன்களான விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என இருவரும் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அப்பொழுது மேடையில் பேசிய விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் பேச்சானது அனைவரையும் கலங்க வைத்து விட்டது.

அவர் தனது உரையை தன் அப்பாவை போன்ற தொனியில், ‘பேரன்பு கொண்ட பெரியோர்களே, தாய்மார்களே, அன்பு கொண்ட சகோதர, சகோதரிகளே, இளைஞர்களே, பொதுமக்களே, என் உயிரிலும் மேலான அன்பு தமிழ் நெஞ்சங்களே மற்றும் திரை உலக பிரமுகர்களே, உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சொல்லுக்கு சொந்தக்காரர் இல்லையென்றாலும், என் மூலம் தமிழ்நாடு முழுவதும் இனியும் இந்த சொல்  ஒலித்துக் கொண்டுதான் இருக்கும். இதை நான் சொல்வதில் ரொம்ப பெருமை அடையறேன்.

#image_title

சந்தோஷப்படுகிறேன். ஏன்னா நான் சின்ன வயசுல இருந்து என் முகத்தை  கண்ணாடியில் பார்ப்பதை விட எங்க அப்பாவை தான் நான் நிறைய தடவை பார்த்துட்டு இருப்பேன். என்று நா தழு தழுக்க கண்கலங்கி அழுதவாறு பேசினார். ‘ நான் அழுத யாரும் தப்பா எடுத்துக்காதீங்க.’ என்று கூறிய அவருக்கு தேதிமுக தொண்டர்கள் ‘அழுகாதீங்க. நாங்க இருக்கிறோம் . நாங்க இருக்கிறோம்’ என்று  ஆறுதல் சொல்ல தொடங்கினர். மேலும் அவர் ‘அப்பா-னா நான் ரொம்ப எமோஷனல் ஆயிடுவேன். யாரும் தப்பா எடுத்துக்காதீங்க. கேப்டன் எங்கேயும் போகல, நம்ம கூட தான் இருக்காங்க’ என்று எமோஷனலாக இன்னும் பல விஷயங்களை இந்த நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார். இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top