Connect with us

CINEMA

தன் மகனுடன் நடிக்க கேப்டன் அழைத்தும் வர மறுத்தாரா விஜய்..? உண்மையில் நடந்தது என்ன..?

நடிகர் விஜயகாந்த், கடந்த 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு நடிகர் விஜய் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். ஆனால் அதற்கு முன், விஜயகாந்தை உடல் நலம் விசாரிக்க விஜய் நேரில் வரவில்லை என்றும், ஆனால் அவர் கேப்டனை சந்திக்க அனுமதி கேட்டும், பிரேமலதா சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் பரவி வருகிறது.

   

இதுகுறித்து கேப்டனுடன் 40 ஆண்டுகாலம் இருந்த, தேமுதிக துணைப் பொதுச் செயலாளர் பார்த்தசாரதி கூறியதாவது, துவக்கத்தில் விஜய் நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை. அப்போது விஜய் அப்பா எஸ்ஏ சசந்திரசேகர், கேப்டனிடம் இதுபற்றி கூற, விஜய் பட்டிதொட்டி எல்லாம் தெரிய வேண்டும் என்பதற்காக, செந்தூரபாண்டி படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்தார் விஜயகாந்த்.

சண்முகப்பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தில் நடிக்க விஜயை கேப்டன் அழைக்கவில்லை. அப்படி எதுவும் நடக்கவில்லை. முதல் படத்திலேயே மற்றொரு ஹீரோவை நடிக்க வைக்க மாட்டார்கள். அது தவறான தகவல். விஜயிடம் கேப்டன் கேட்கவும் இல்லை. அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. ஆனால் தன் மகனுடன் விஜய் நடிக்க வேண்டும் என கேப்டன் கேட்டிருந்தால் நிச்சயம், விஜய் சம்மதித்திருப்பார். எஸ்ஏசிக்கும் கேப்டன் மீது நிறைய மரியாதை உண்டு. நடக்காத விஷயங்களை தவறாக ஊடகங்களில் பரப்புகின்றனர்.

நடிகர் விஜய் மட்டுமின்றி பலரும் கேப்டனை சந்திக்க விரும்பினர். உடல் நலமில்லாத அவரை நேரில் நலம் விசாரித்து, பார்த்துவிட்டு போக ஆசைப்பட்டனர். ஆனால், கொரோனா காலகட்டம் என்பதால் டாக்டர்கள் வெளியாட்கள் கேப்டனை பார்க்க வந்து செல்லும் போது, இன்ஸ்பெக்சன் ஆக அதிக வாய்ப்புள்ளது என எச்சரித்தனர். அதனால் டாக்டர்கள் ஆலோசனைப்படி தான், கேப்டனை பார்க்க யாரும் அனுமதிக்கப்படவில்லை. விஜய் அப்பா எஸ்ஏசியும் வயதானவர். கேப்டனும் வயதானவர் என்பதால்தான் அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. சமீபத்தில் ஆர்கே செல்வமணி, விக்ரமன் போன்றவர்கள் கேப்டனை வந்து பார்த்துவிட்டு சென்றனர். விஜயை தன் தம்பி போல தான் பிரேமலதா நினைக்கிறார். எஸ்ஏசி மீதும் கேப்டன் குடும்பத்துக்கு தனி மரியாதை உண்டு என்று கூறியிருக்கிறார் பார்த்தசாரதி.

#image_title

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top