Connect with us

CINEMA

“கேப்டன் காதலிச்சது உண்மை தான்.. ராவுத்தர் தான் வேண்டாம்னு சொன்னாரு”.. பல வருட ரகசியத்தை சொன்ன விஜயகாந்தின் பால்ய கால நண்பர்..

நடிகர் விஜயகாந்தின் சொந்த ஊர் மதுரை. அவர் அப்பா அழகர்சாமி காங்கிரஸ் கட்சி சார்ந்த ஒரு கவுன்சிலர். ரைஸ்மில் வைத்திருந்தார். வசதியான குடும்பத்தில் பிறந்த விஜயகாந்துக்கு, பால்ய காலத்திலேயே மதுரையில் பல நெருங்கிய நண்பர்கள் உண்டு. அவர்களில் முக்கியமானவர்கள் இப்ராகிம் ராவுத்தா், சுந்தர்ராஜன், திருப்பதி போன்றவர்கள். விஜயகாந்தின் பால்ய கால நண்பரான திருப்பதி ஒரு நேர்காணலில் கூறியதாவது, விஜயகாந்த் இங்கு இருக்கும்போது நாங்கள் நண்பர்கள் 20 பேர் வரை ஒன்று சேர்ந்து சினிமாவுக்கு போவோம். ஜாலியாக அரட்டை அடிப்போம்.

   

நடிகை ராதிகாவை திருமணம் செய்துக்கொள்ள வேண்டாம் என சொன்னது இப்ராகிம் ராவுத்தா்தான். ஏனெனில் விஜயகாந்த் இன்னும் சினிமாவில் நிறைய புகழ் பெற வேண்டும். பெரிய இடத்துக்கு வர வேண்டும் என்பதுதான் காரணம். மற்றபடி ராதிகா குறித்து எந்த தவறான கருத்தும் அவரிடம் இல்லை. அதற்கு பிறகு, பிரேமலதாவை இப்ராகிம் ராவுத்தர்தான் விஜயகாந்துக்கு திருமணம் செய்து வைத்தார்.

மதுரையில், ராஜா முத்தையா மண்டபத்தில் பிரமாண்டமாக திருமணம் நடந்தது. அப்போதைய தமிழக முதலமைச்சர் கருணாநிதிதான் ஜிகே மூப்பனார் முன்னிலையில் திருமணத்தை நடத்தி வைத்தார். எல்லா நடிகர், நடிகைகளும், அரசியல் தலைவர்களும் திருமணத்துக்கு வந்துவிட்டனர். எங்களால் மண்டபத்துக்குள் போகவே முடியவில்லை.

அடுத்த 2 நாள் கழித்து, விஜயகாந்த் எங்களை பார்த்த போது ஏண்டா கல்யாணத்துக்கு வரலை எனக்கேட்டார். அந்த கூட்டத்துல எங்கேப்பா உள்ள வர முடிஞ்சது என சொன்னோம். அப்படியா என கேட்டவர், அடுத்த ஒரு வாரத்தில் மீண்டும் ஒரு மண்டபத்தில் ரிசப்சன் நடத்தி, தன் நண்பர்களை எல்லாம் அழைத்து மணமக்களாக வந்து நின்று சந்தோஷப்படுத்தினார். அவர் திருமணம் நடப்பதற்காக இப்ராகிம் ராவுத்தர் உட்பட நாங்கள் 18 பேர் திருப்பதி சென்று மொட்டை போட்டுக்கொண்டோம்.

ஏண்டா, 18 பேருமாடா மொட்டை போடுவீங்க, எல்லாரையும் மொட்டையான்னு கூப்பிடணும் என கிண்டலாக கேட்டார் விஜயகாந்த். ராதிகாவை திருமணம் செய்ய ஆசைப்பட்டார். அது நடக்கவில்லையே தவிர, மற்றபடி அதில் வருத்தப்பட எதுவும் இல்லை. விஜயகாந்த் அதை சகஜமாக தான் எடுத்துக்கொண்டார் என கேப்டனின் பால்ய கால நண்பர் திருப்பதி அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

#image_title

author avatar
Sumathi
Continue Reading

More in CINEMA

To Top