Connect with us

CINEMA

துபாயில் சொகுசு கப்பலில் குடும்பத்துடன் ஹாயாக சுற்றி திரியும் ‘தல’ அஜித்… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக  வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த ‘துணிவு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது ‘விடாமுயற்சி’ திரைப்படத்தில் இயக்குனர்  மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்த வருவதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது விடாமுயற்சி திரைப்படத்தின் சூட்டிங் அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அவ்வபொழுது இணையத்தில் விடாமுயற்சி ஷூட்டிங் ஸ்பாட் வீடியோக்களும், தல அஜித்தின் நியூ லுக் புகைப்படங்களும் வெளியாகி வைரலாகி  வருகிறது.

   

நடிகர் அஜித் நடிகை ஷாலினியை  2000ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்பொழுது ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் நடிகர் அஜித் அவ்வப்பொழுது தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

தற்பொழுது இவர் தனது மகள், மகன், மனைவி என முழு குடும்பத்துடன் துபாய்க்கு சென்றுள்ளார்.  அங்கு புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகர் அஜித் தனது குடும்பத்துடன் படகில் செல்லும்  வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

 

Continue Reading

More in CINEMA

To Top