Connect with us

CINEMA

திடீரென இந்து மதத்திற்கு மாறிய நடிகர் லிவிங்ஸ்டன்.. இதெல்லாம் ஒரு காரணமா?.. என்னன்னு தெரிஞ்சா சிரிச்சிருவீங்க..!!

தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் லிவிங்ஸ்டன். இவர் 1982 ஆம் ஆண்டு டார்லிங் டார்லிங் என்ற திரைப்படத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் ஆக நடித்தார். அந்த திரைப்படத்தின் மூலம் தான் இவர் சினிமாவில் நுழைந்தார். அதோடு அந்த திரைப்படத்தின் உதவி இயக்குனராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். 1988 ஆம் ஆண்டு வெளியான பூந்தோட்ட காவல்காரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

   

அதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களை ஏற்று நடத்தி வந்த இவர் சுந்தர புருஷன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கேப்டன் பிரபாகரன் மற்றும் உழைப்பாளி போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார். இவர் சினிமாவில் பெரும்பாலான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும் குணச்சித்திர வேடத்திலும் தான் அதிகமாக நடித்துள்ளார். இவருக்கு என்றும் மக்கள் மத்தியில் தனி ஒரு இடம் உள்ளது.

இப்படி பல புகழுக்குரிய இவர் ஜசின்தா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு ஜோவிதா மற்றும் ஜமீனா என்ற இரண்டு மகள்கள் உள்ளன. இந்த நிலையில் லிவிங்ஸ்டன் சமீபத்தில் தான் கிறிஸ்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியதாக அறிவித்தார். இது தொடர்பாக இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் மதம் மாறலாம் என்று நினைத்தேன். கிறிஸ்டியானாக இருந்து எனக்கு போர் அடித்து விட்டது. அதனால் இந்துவாக மாறிவிட்டேன். நான் கிருஷ்ணருடைய பக்தர். அதனால் ஹரே ராம ஹரே கிருஷ்ணாவில் நான் தற்போது சேர்ந்து விட்டேன். அதனுடைய பொட்டு தான் நெற்றியில் வைத்திருக்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top