Connect with us

CINEMA

இயக்குனருடன் சண்டையிட்டு படப்பிடிப்பிலிருந்து பாதியிலேயே கிளம்பிய ரம்பா.. 46 ஷாட்கள் அவர் இல்லாமலே எடுத்து ஹிட்டான விஜய் பாடல்..!

தமிழில் கடந்த 1998 ஆம் ஆண்டு விஜய், தேவயானி மற்றும் ரம்பா நடிப்பில் செல்வபாரதி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் நினைத்தேன் வந்தாய். இந்தத் திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே பட்டித் தொட்டி எங்கும் ஒலித்தது. இந்த நிலையில் இந்த திரைப்படம் குறித்து பல வருடங்கள் கழித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நினைத்தேன் வந்தாய் பாடலில் சுமார் 45 ஷாட்களில் ரம்பா இடம்பெறவில்லை என்று படத்தின் இயக்குனர் செல்வ பாரதி கூறியுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த செய்தியை பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இது தொடர்பாக அவர் கூறுகையில், நினைத்தேன் வந்தாய் திரைப்படத்தில் நடிக்கும் போது ரம்பாவுக்கும் எனக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

   

இந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது படப்பிடிப்பை முடித்து தராமல் தெலுங்கு படம் ஒன்றுக்கு ரொம்ப தேதி கொடுத்துவிட்டு நடிக்காமல் சென்று விட்டார். நான் அவரிடம் எவ்வளவோ பேசியும் அதனை அவர் கேட்பதற்கு தயாராக இல்லை. அப்போது வண்ண நிலவே பாடல் முழுவதுமாக முடிக்கப்படாமல் இருந்தது. அதில் ரம்பா நடிக்க வேண்டிய பாதி காட்சிகளில் நடிக்காமலேயே போய்விட்டார். நான் ஒரு டைரக்டர் சொல்றேன், நம்மள கொஞ்சம் கூட மதிக்காம இப்படி போயிட்டாங்க, இனிமை இவங்கள கூப்பிடக்கூடாது என்று கோபம் வந்துவிட்டது.

நம்மள மதிக்காத இவங்கள வெச்சி பாட்டு பண்ண கூடாது என்று நினைத்து ரம்யா கிட்ட இருந்த காஸ்டியூம் டிரஸ் மட்டும் வாங்கிட்டு வாங்கன்னு சொல்லி ஒரு ஜூனியர் நடிகையை வைத்து அந்தப் பாட்டை முடிக்கலாம் என்று முடிவு செய்தேன். இதுவரை இப்படி ஒரு விஷயம் நடந்தது யாருக்குமே தெரியாது. வண்ண நிலவே பாடலில் பாதி காட்சிகளில் வருவது ரம்பாவே கிடையாது.

சுமார் 45 ஷாட்களில் ரம்பா இல்லாமலேயே எடுத்து முடித்தேன். இப்போ எடுத்து பாருங்க பாட்டில வரை 46 ஷாட்ல ரம்பா இல்லாமலே பாட்டு இருக்கும். முதலில் பாட்டில் ஊஞ்சலில் இருப்பது மட்டும்தான் ரம்பா. மற்றபடி ஓடி வர மாதிரி இருக்கிறது எல்லாமே அவர் இல்லை. ஜூனியர் ஆர்டிஸ் ஒருவரை வைத்து பாட்டை எடுத்து முடித்தேன் எனக்கு அவ்வளவு கோபம் வந்துவிட்டது என செல்வ பாரதி பல வருடம் கழித்து இந்த உண்மையை கூறியுள்ளார்.

 

author avatar
Nanthini
Continue Reading

More in CINEMA

To Top